Teenager arrested in Gundas Act for attempted murder
பாணாவரம் பிள்ளையார் கோவில் தெரு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் வினோத்குமார் என்கிற வினோத் (வயது 32). இவர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிமாறன் தலைமையிலான தனிப்படை போலீசார், வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் வினோத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.