செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும் .
செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது .பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.
செவ்வாய் திசை நடப்பவர்கள்,செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ,விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசிரிடம் ,சித்திரை, அவிட்ட நட்சத்திரகாரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.
செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும்.
இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை அல்லது பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.
இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், mபிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
எந்த ராசி நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது எதார்தமான உண்மையாகும்.