குறள் : 857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்
மு.வ உரை :
இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.
கலைஞர் உரை :
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்
சாலமன் பாப்பையா உரை :
மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.
Kural 857
Mikalmeval Meypporul Kaanaar Ikalmeval
Innaa Arivi Navar
Explanation :
Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.
Horoscope Today: Astrological prediction for August 30 2022
இன்றைய ராசிப்பலன் - 30.08.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
30-08-2022, ஆவணி 14, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 03.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 11.49 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Nalla Neram
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 30.08.2022 | Today rasi palan - 30.08.2022
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பெரியவர்களிடம் பேச்சில் நிதானம் தேவை. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கடகம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துகள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு மனஉளைச்சல் அதிகமாகும். உங்கள் தேவைகள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.
தனுசு
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.
மீனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001