குறள் : 851

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்

மு.வ உரை :

எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.

கலைஞர் உரை :

மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்

சாலமன் பாப்பையா உரை :

எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.

Kural 851

Ikalenpa Ellaa Uyirkkum Pakalennum
Panpinmai Paarikkum Noi

Explanation :

The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.

Horoscope Today: Astrological prediction for August 24 2022

இன்றைய ராசிப்பலன் - 24.08.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam



24-08-2022, ஆவணி 08, புதன்கிழமை, துவாதசி திதி காலை 08.31 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.38 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Nalla Neram

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் -  24.08.2022 | Today rasi palan - 24.08.2022


மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம்

இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். 

மிதுனம்

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். செலவுகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். வரவை காட்டிலும் செலவுகள் கூடுதலாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.

கன்னி

இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினை தீரும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் நிதானம் தேவை. பூர்வீக சொத்து விஷயத்தில் சற்று அலைச்சல் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலன் கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

மகரம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். 

கும்பம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, அசதி இருந்தாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். வரவும் செலவும் சமமாகவே இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கடன்கள் குறையும்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001