குறள் : 846

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி


மு.வ உரை :

தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.


கலைஞர் உரை :

நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்


சாலமன் பாப்பையா உரை :

தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.


Kural 846

Atram Maraiththalo Pullarivu Thamvayin

Kutram Maraiyaa Vazhi


Explanation :

Even to cover one’s nakedness would be folly if (one’s) faults were not covered (by forsaking them).

Horoscope Today: Astrological prediction for August 19 2022

இன்றைய ராசிப்பலன் - 19.08.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

19-08-2022, ஆவணி 03, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி இரவு 11.00 வரை பின்பு தேய்பிறை நவமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 01.53 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பின்இரவு 01.53 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கோகுலாஷ்டமி. கிருத்திகை விரதம். பைரவர் வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Nalla Neram

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00


இன்றைய ராசிப்பலன் - 19.08.2022 | Today rasi palan - 19.08.2022


மேஷம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். 

சிம்மம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வராத கடன்கள் இன்று கைக்கு வந்து சேரும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம்

இன்று பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.





கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001