குறள் : 840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
மு.வ உரை :
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல் ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
கலைஞர் உரை :
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது
சாலமன் பாப்பையா உரை :
சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.
Kural 840
Kazhaaakkaal Palliyul Vaiththatraal Saandror
Kuzhaaaththup Pedhai Pukal
Explanation :
The appearance of a fool in an assembly of the learned is like placing (ones) unwashed feet on a bed.
Horoscope Today: Astrological prediction for August 13 2022
இன்றைய ராசிப்பலன் - 13.08.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
13-08-2022, ஆடி 28, சனிக்கிழமை, துதியை திதி இரவு 12.54 வரை பின்பு தேய்பிறை திரிதியை. சதயம் நட்சத்திரம் இரவு 11.28 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் இரவு 11.28 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம் | Indraya Nalla Neram
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 13.08.2022 | Today rasi palan - 13.08.2022
மேஷம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.
மிதுனம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எதிலும் கவனம் தேவை.
கடகம்
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
சிம்மம்
இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ற உயர்பதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நினைத்தது நடக்கும்.
கன்னி
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் அனுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். கடன்கள் சற்று குறையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
மீனம்
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001