குறள் : 839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
மு.வ உரை :
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
கலைஞர் உரை :
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை
சாலமன் பாப்பையா உரை :
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!
Kural 839
Peridhinidhu Pedhaiyaar Kenmai Pirivinkan
Peezhai Tharuvadhon Ril
Explanation :
The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.
Horoscope Today: Astrological prediction for August 12 2022
இன்றைய ராசிப்பலன் - 12.08.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
12-08-2022, ஆடி 27, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி காலை 07.05 வரை பின்பு பிரதமை பின்இரவு 03.47 வரை பின்பு தேய்பிறை துதியை. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 01.35 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Nalla Neram
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 12.08.2022 | Today rasi palan - 12.08.2022
மேஷம்
இன்று நீங்கள் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.49 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி இருக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 02.49 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
சிம்மம்
இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். தெய்வ வழிபாடு நல்லது.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய இடம் பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நெருங்கியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் உண்டாகும். சிக்கனமாக இருப்பது நல்லது.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.
கும்பம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும். வேலை செய்யும் இடங்களில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மீனம்
இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். கூட்டுத் தொழில் புரிவோர்க்கு கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001