குறள் : 830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்
மு.வ உரை :
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
கலைஞர் உரை :
பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்
சாலமன் பாப்பையா உரை :
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.
Kural 830
Pakainatpaam Kaalam Varungaal Mukanattu
Akanatpu Oreei Vital
Explanation :
When ones foes begin to affect friendship one should love them with ones looks and cherishing no love in the heart give up (even the former).
Horoscope Today: Astrological prediction for August 03, 2022
இன்றைய ராசிப்பலன் - 03.08.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
03-08-2022, ஆடி 18, புதன்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 05.41 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 06.23 வரை பின்பு சித்திரை. மரணயோகம் மாலை 06.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஆடி 18-ம் பெருக்கு. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla Neram
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 03.08.2022 | Today rasi palan - 03.08.2022
மேஷம்
இன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அதில் வெற்றி அடையலாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.
கடகம்
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை. நட்பும் பகையாக மாறலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அனுகூலங்கள் உண்டாகும்.
கன்னி
இன்று உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய நாளாக இந்த நாள் அமையும். மிக கடினமான காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளால் லாபகரமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து சென்றால் இருக்கும் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன் கிட்டும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
கும்பம்
இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.
மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் ரீதியாக இருந்த எதிர்ப்புகள் குறையும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001