600 Police Security for Vinayagar Chaturthi Festival SP Deepa sathyan Information

விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 31ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அனைவரும் சிலைகள் வைத்து வழிபடலாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தடுக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பி, 15 இன்ஸ்பெக்டர், 98 எஸ்ஐ உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பதட்டமான பகுதிகளில் போலீ சாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் தெரிவித்தார்.