ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஹண்ட்டர் 350 புதிய இரு சக்கர வாகனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரெட்ரோ. மெட்ரோ. ரிபெல் என மூன்று வகைகளில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இதன் விலை ரூ.1,49,900 முதல் ரூ.1,63,900 வரை (ஷோரூம் விலை) ஆகும்.
இது தொடர்பாக அந்நிறுவனத் தின் மேலாண்மை இயக்குநர் சித்தார்த்லால் கூறுகையில், 'ஜே வகை என் ஜின் ஹண்ட்டர் வாகனத்தில் மேம்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள ராயல் என்ஃபீல்ட் வாகனங்களின் தரத்துடன், இப் போது என்ஜின் மேலும் சிறப்பாகச் செயல்படும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது' என்றார்.
ஹண்ட்டரின் எடை 181 கிலோ ஆகும். ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் குடன் ஒப்பிடும்போது இது 14 கிலோ குறைவாகும். அதிகபட்சமாக மணிக்கு 114 கி.மீ. வேகத்தில் செல்லும் திறனுடையது.