Cybercrime police intensively investigate 2 people caught with 40 SIM cards obtained through fake Aadhaar cards in Vellore 

Is it a terrorist plan?

 
வேலூரில் போலியான ஆதார் கார்டுகளை வைத்து பெற்ற 40க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளுடன் 2 பேர் பிடிப்பட்ட நிலையில் அவர்களிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் சத்துவாச்சாரி போலீசார் நேற்று காலை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அலமேலுமங்காபுரம் அருகே சர்வீஸ் சாலையில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் 40க்கும் மேற்பட்டமேற்பட்ட சிம்கார்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த சிம்கார்டுகள், ஆவணங்கள். ஆதார்கார்டுகளின் உண்மை தன்மையை ஆராய்ந்த போது, அந்த ஆதார் கார்டுகள் வெவ்வேறு முகவரிகளில் உள்ள வெவ்வேறு நபர்க ளின் ஆதார் கார்டுகளை டவுன்லோடு செய்து அதில் தங்கள் புகைப்படங்களை இணைத்து போலியான ஆதார் கார்டுகளை தயாரித்து சிம்கார்டுகளை வாங்கியுள்ளனர்.

மேலும் அதற்காக அவர்கள் இணைத்து வழங்கிய ஆவணங்களும் போலியானவை என தெரியவந்தது. இதனால் இவர்கள் போலியான ஆவணங்களுடன் போலியான பெயர்களில் சிம் கார்டுகளை எதற்காக பெற்றனர். இந்த சிம்கார்டுகள் தீவிரவாதிகளுக்கு பயன்படுத்த திட்டம் தீட்டி பெறப்பட்டவையா? அல்லது சமூக விரோதிகளுக்காக பெறப்பட்டவையா? என்பது தெரியவில்லை.

இதையடுத்து பிடிப் பட்ட 2 பேரையும் சத்துவாச்சாரி போலீசார் வேலூர் சைபர்கிரைம் போலீசில் ஒப்படைத்தனர். அங்கு இவர்களிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது.