2 people arrested near Kaveripakkam for threatening to kill VAO
காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவல ராக வேல்முருகன் பணி புரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் அலுவலகத்தில் பணியில் இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (42), முனிசாமி (48) ஆகிய இருவரும், கிராம நிர்வாக அலுவலரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நேற்று அவளூர் போலிசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.