நெமிலி அடுத்த சயனபுரம் பகு தியை சேர்ந்தவர் மோகன சுந்தரம் (47). இவர் மாட்டு வியாபாரம் செய்து வருகிறார்.

மேலும் தனது வீட்டின் பின்புறம் ஆடுகளை வளர்த்தும் வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல ஆடுகளுக்கு தண்ணீர் வைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். விடியற்காலை எழுந்து சென்று பார்த்த போது தொட்டியில் கட்டி வைத்திருந்த 13 ஆடுகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்கள்.

காணாமல் போன ஆடுகளை திருடி சென்றவரை சுற்றியுள்ள பல பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மோகன சுந்தரம் நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சிறுணமல்லி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சிறுண மல்லி பேருந்து நிலையத்தில் நேற்று காலை போலீசாரை கண்டவுடன் ஓட முயன்றவரை பிடித்து விசாரணை செய்ததில் நாகவேடு கிராமத்தை சேர்ந்த சலாம்(35) என்பது தெரிய வந்தது.

இவர் தனது கூட்டாளிகள் உடன் சயனபுரம் கிராமத்தில் இருந்து 13 ஆடு களை திருடியது அம்பல மானது. உடன் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அரக்கோணம் சப் ஜெயிலில் அடைத்தனர்.

சலாமிடம் இருந்து 6 ஆடுகளையும் 76 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சலாமின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.