Why Indians sit down and eat ??? Benefits by sitting on the floor and eating
முன்னோர்கள் கூறிய மருத்துவங்களில் இதுவும் ஒன்று.நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும் பொழுது இடுப்பு பகுதியில் இருந்து மேலே அதிகமாக இரத்த ஒட்டம் செல்கிறது. அந்த சமயத்தில் இடுப்புக்கு கீழே உள்ள பகுதிக்கு இரத்த ஒட்டம் குறைந்த காணப்படும். இதனால் உடலின் மிக முக்கிய உறுப்புகளாகிய சிறு நீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்பின் மேல் பகுதியில் இருப்பதால் இந்த பகுதிக்கு இரத்தம் சென்று நமக்கு சக்தியும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க செய்கிறது.
இதனால் தான் சாப்பிடும் பொழுது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறினார்கள். ஏனென்றால் இடுப்புக்கு கீழே பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகம் செல்லாமல் முழு சக்தியையும் வயிற்றுப் பகுதிக்குச் சென்று நம்முடைய உறுப்புகள் இயங்குத்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஜீரணத்தையும் நன்றாக நடைபெற உதவுகிறது.