வேலூர் நேதாஜி மார்க் கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ். டி.ஏ. பாலு இன்று காலமானார். இவரது மறைவை யொட்டி நாளை வேலூரில் காய்கறி கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
வேலூர் டவுன் நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவராகவும், வணிகர்சங்க பேரமைப்பின் வேலூர் மாவட்ட துணைத் தலைவராகவும் இருந்தவர் எஸ்.எஸ்.டி.ஏ.பாலு (வயது 72). காட்பாடி காந்தி நகர் கிழக்கு மெயின்ரோடு, அக்சிலியம் கல்லூரி சாலையில் உள்ள வீட்டில் பாலு வசித்து வந்தார். இருதய நோயால் அவதிப்பட்ட பாலு, இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.அப்படியிருந்தும் நோயிலிருந்து அவர் குணமாகவில்லை. இந்நிலையில் இன்று அதி காலை எஸ்.எஸ்.டி.ஏ.பாலு காலமானார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.
நாளை காலை 10 மணிக்கு இவரது உடல் வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவரது மறைவுக்கு காய்கறிகள் மற்றும் வணிகர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்.எஸ். டி.ஏ.பாலுவின் மறைவை யொட்டி வருத்தம் தெரிவிக்கும் விதமாக நாளை வேலூரில் உள்ள காய்கறி கடைகள் மூடப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.