👉 1888ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற செல்மன் ஆபிரகாம் வேக்ஸ்மன் ரஷ்யப் பேரரசின் (தற்போதைய உக்ரைன்) நோவா ப்ரிலூகா என்ற இடத்தில் பிறந்தார்.


👉 1784ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி முதன்முதலாக சூரியனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள தொலைவைக் கண்டறிந்த பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் ஜெர்மனியில் பிறந்தார்.

👉 1923ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இந்திய பாடகர் முகேஷ் சந்த் மத்தூர் டெல்லியில் பிறந்தார்.

👉 1972ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் டி.எஸ்.பாலையா மறைந்தார்.


முக்கிய தினம் :-


பை தோராய தினம்

👉 பொதுவாக இத்தினம் ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. பையின் மதிப்பு எண்ணளவில் 22/7 (அ) 3.14 ஆகும்.

👉 பை தினம் முதன்முறையாக 1988-ல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. மேலும் லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


நினைவு நாள் :-


👉 1968ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இந்தியாவின் முன்னோடிப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மறைந்தார்.


பிறந்த நாள் :-


வாணிதாசன்

👉 தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் 1915ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும். 

👉 இவருடைய பாடல்கள் 'தமிழ் கவிதைக் களஞ்சியம்' வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. 

👉 இவர் 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார். எனினும் வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

👉 கவிஞரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமை கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட வாணிதாசன் தனது 59வது வயதில் (1974) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


838 – ஆன்சென் என்ற இடத்தில் நடந்த சமரில் பைசாந்தியப் பேரரசர் தியோபிலசு அப்பாசியர்களிடம் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.

1099 – முதலாம் சிலுவைப் போர்: பௌலியனின் கோட்ஃபிறி எருசலேம் பேரரசின் திருக்கல்லறைத் தேவாலயத்தின் முதலாவது காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1298 – இசுக்காட்லாந்து விடுதலைப் போர்கள்: பால்கிர்க் சமரில் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் வில்லியம் வேலசையும் அவரது இசுக்காட்டியப் படைகளையும் தோற்கடித்தார்.

1456 – அங்கேரியின் ஆட்சியாளர் பெல்கிரேட் முற்றுகையின் போது உதுமானியப் பேரரசர் இரண்டாம் முகமதுவைத் தோற்கடித்தார்.

1499 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிசுப் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.

1587 – அமெரிக்காவில் வட கரொலைனா, ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றிகள் வந்திறங்கினர்.

1706 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையில் ஒன்றிணைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பின்னர் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக வழிவகுத்தது.

1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: எசுப்பானிய, பிரித்தானியக் கடற்படைகளுக்கிடையே சமர் மூண்டது. இதன்போது ஹோரஷியோ நெல்சன் கையில் படுகாயமடைந்து, கையின் ஒரு பகுதியை இழந்தார்.

1802 – பேரரசர் கியா லொங் அனோய் நகரைக் கைப்பற்றி வியட்நாமை ஒன்றிணைத்தார்.

1812 – நெப்போலியப் போர்கள்: வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் எசுப்பானியாவில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

1823 – யாழ்ப்பாணத்தில் பட்டிக்கோட்டா குருமடம் டானியேல் வாரன் புவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.[1]

1916 – கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்.

1933 – தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து நியூயார்க்கை வந்தடைந்தார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: போர்க்காலத் தேவைக்காக அமெரிக்காவில் பெட்ரோல் பங்கீட்டு அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

1942 – பெரும் இன அழிப்பு: போலந்து, வார்சாவில் இருந்து யூதர்களின் நாடுகடத்தல் ஆரம்பமானது.

1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: நேச நாடுகள் பலெர்மோவைக் கைப்பற்றின.

1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாட்சிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.

1946 – எருசலேமில் கட்டளைப் பலத்தீனின் நிர்வாக மையம் அமைந்திருந்த கட்டடத்தில் சியோனிஸ்டுகள் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் 91 பேர் கொல்லப்பட்டனர்.

1962 – நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.

1963 – முடிக்குரிய குடியேற்றமான சரவாக் சுயாட்சி பெற்றது. இதே ஆண்டு செப்டம்பர் 16 இல் இது மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1976 – இரண்டாம் உலகப் போரின் போது பிலிப்பீன்சில் சப்பான் இழைத்த போர்க் குற்றங்களுக்கான இழப்பீட்டை சப்பான் முழுமையாகச் செலுத்தியது.

1977 – சீனத் தலைவர் டங் சியாவுபிங் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

1983 – போலந்தில் இராணுவச் சட்டம் அதிகாரபூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டது.

1992 – மெதெயின் அருகே, கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல்காரர் பப்லோ எசுகோபர் சிறையில் இருந்து தப்பினார்.

1999 – விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.

2003 – ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.

2009 – 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.

2011 – நோர்வேயில் இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மொத்தம் 77 பேர் கொல்லப்பட்டனர்.

2013 – சீனாவில் டிங்கி என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் 89 பேர் உயிரிழந்தனர்.

2019 – இந்தியாவில் சந்திரயான்-2 என்ற விண்கலம் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டது.

இன்றைய பிறப்புகள் 


1559 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (இ. 1619)

1647 – மார்கரெட் மரி அலக்கோக், பிரான்சியப் புனிதர் (இ. 1690)

1784 – பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல், செருமானிய கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1846)

1904 – தொ. மு. பாஸ்கர தொண்டைமான், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1965)

1915 – வாணிதாசன், புதுவைக் கவிஞர் (இ. 1974)

1921 – எஸ். டி. சுந்தரம், தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், திரைப்பட இயக்குநர் (இ. 1979)

1923 – முக்கேஷ், இந்தியப் பாடகர் (இ. 1976)

1933 – ஸ்ரீதர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா (இ. 2008)

1937 – வசந்த் ரஞ்சானே, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)

1943 – மசாரு இமோடோ, சப்பானிய செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 2014)

1944 – ஆனந்த் சத்தியானந்த், நியூசிலாந்தின் 19வது ஆளுநர்

1947 – ஜில்ஸ் டுசப், கனடிய அரசியல்வாதி

1948 – அல்போன்சோ கனோ, கொலம்பிய மார்க்சியவாதி (இ. 2011)

1953 – எஸ். பி. சைலஜா, தென்னிந்தியத் திரைப்படப் பாடகி

1970 – தேவேந்திர பத்னாவிசு, மகாராட்டிராவின் 18வது முதலமைச்சர்

1982 – தில்ருவன் பெரேரா, இலங்கை துடுப்பாட்ட வீரர்

1983 – நுவன் குலசேகர, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

1992 – செலெனா கோமஸ், அமெரிக்க நடிகை, பாடகி

1996 – சகிளீர் கிசோண்டோ, அமெரிக்க நடிகர்

2013 – கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ்

இன்றைய இறப்புகள் 


1619 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (பி. 1559)

1676 – பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (பி. 1590)

1826 – கியூசெப்பே பியாசி, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1746)

1832 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் (பி. 1811)

1967 – கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1878)

1968 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளி (பி. 1886)

1972 – டி. எஸ். பாலையா, தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1914)

1995 – சிவகுமார் ராய், இந்திய எழுத்தாளர் (பி. 1919)

1996 – நாரண. துரைக்கண்ணன், தமிழக்ப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1906)

2012 – டொன் பொஸ்கோ, இலங்கையின் நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகர்

2013 – தங்கராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்

2015 – அ. செ. இப்ராகிம் இராவுத்தர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்

2020 – கோவை ஞானி, தமிழக எழுத்தாளர், மார்க்சியத் திறனாய்வாளர் (பி. 1935)

இன்றைய சிறப்பு நாள்


பை நாள்

புரட்சி நாள் (காம்பியா)

மகதலேனா மரியாள் திருவிழா நாள்