Teenager who went to the Police investigation hanged himself inside the house! !
குடியாத்தத்தில் வீட்டுக்குள் தூக்கு மாட்டி வாலிபர்தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அசோக்நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் சக்திவேல் (வயது 19). 8ம் வகுப்புவரை படித்த சக்திவேல், பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 50கிராம் கஞ்சாவைத்திருந்த வழக்கில் சக்தி வேலை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் சக்திவேல் வெளியேவந்துள்ளார். ஆனால் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் விசாரணைக்காக சக்தி வேலை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இதில் சக்திவேல் மன அழுத்தத்திற்கு ஆளானார். மேலும் கடந்த சிலநாட்களாகவே அவர் வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, தனது அறையில் தூக்கு மாட்டி சக்திவேல் தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வீட்டுக்குள் அவர் பிணமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சக்திவேலின் உடலை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.