- நாட்டின் தலைவர்
- அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவாலர்
- முப்படைகளின் தலைவர்
- நாட்டின் முதல் குடிமகன்
நிர்வாக அதிகாரங்கள்
- பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம். அரசின் அனைத்து நடவடிக்கைகளும் குடியரசுத் தலைவரின் பெயரிலேயே மேற்கொள்ளப்படும்.
- மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரை (அட்டர்னி ஜெனரல்) நியமிக்கும் அதிகாரம்.
- தலைமை கணக்குத் தணிக்கையாளர், தலைமைத் தேர்தல் ஆணையர், மற்ற ஆணையர்கள், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம்.
- மாநிலங்களின் ஆளுநர்களை குடியரசுத் தலைவரே நியமிப்பார்.
- நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களை குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நிர்வாகிகளே நிர்வகிப்பர்.
- அரசாங்கம் சார்ந்த எந்தவொரு தகவலையும் பிரதமரிடமிருந்து கோரமுடியும்.
- நாட்டின் எந்தப் பகுதியையும் பழங்குடியின, பட்டியலினப் பகுதியாக அறிவித்து, அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம்.
- அமைச்சரவையின் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு கூறும் அதிகாரம்.
நிதிசார் அதிகாரங்கள்
- பண மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்றி தாக்கல் செய்ய முடியாது.
- குடியரசுத் தலைவரின் பெயரிலேயே நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது.
- அவசரகால நிதியில் இருந்து நிதியை விடுவிக்கும் அதிகாரம்.
- 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம்.
நீதிசார் அதிகாரங்கள்
- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை குடியரசுத் தலைவரே நியமிப்பார்.
- குறிப்பிட்ட சட்டம் தொடர்பான கருத்துகளை உச்சநீதிமன்றத்திடம் கோரும் அதிகாரம்.
- நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கவும், தண்டனையைக் குறைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
பாதுகாப்புசார் அதிகாரங்கள்
- ராணுவ தலைமைத் தளபதி, கடற்படை தலைமைத் தளபதி, விமானப்படை தலைமைத் தளபதி ஆகியோரை நியமிக்கும் அதிகாரம்.
- எந்தவொரு நாட்டின் மீதும் போர்தொடுக்க உத்தரவிடும் அதிகாரம்.
நெருக்கடிநிலை அதிகாரங்கள்
- நாடு முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமோ நெருக்கடி நிலையை அமல்படுத்தும் அதிகாரம்.
- மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் அதிகாரம்.
- நிதிசார் நெருக்கடியை அமல்படுத்தும் அதிகாரம்.
சட்டம் சார்ந்த அதிகாரங்கள்
- இந்திய நாடாளுமன்றம் குடியரசுத் தலைவரையும் உள்ளடக்கியது.
- குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்கள் சட்டவடிவு பெறும்.
- நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கான அழைப்புவிடுக்கும் அதிகாரம்; முடித்துவைக்கும் அதிகாரம்.
- நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத சமயங்களில் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கும் உரிமை.
- மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம்.
- ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல்நாளிலும், புதிய அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும் குடியரசுத்தலைவர் சிறப்பு உரையாற்றுவார்.
- மாநிலங்களவைக்கு 12 நியமன உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம்.
- மக்களவையைக் கலைக்கும் அதிகாரம்.
- எம்.பி.க்களின் பதவிநீக்கம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் அதிகாரம்.
- நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களைத் திருப்பி அனுப்பவும், காத்திருப்பில் வைக்கவும் அதிகாரம்.
- மத்திய பணியாளர் தேர்வாணையம், நிதிக்குழுவின் ஆண்டறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் அதிகாரம்.
- மாநில ஆளுநர்கள் அனுப்பிவைக்கும் மாநில மசோதாக்களை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் காத்திருப்பில் வைக்கலாம்.
கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை
- குடியரசுத் தலைவருக்குப் பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தையும் தன்னிச்சையாக அவர் செயல்படுத்த முடியாது. பெரும்பாலான அதிகாரங்களை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அவரால் செயல்படுத்த முடியும். மத்திய அமைச்சரவையின் அறிவுரைப்படியே செயல்பட வேண்டுமென அரசமைப்புச்சட்டம் குடியரசுத் தலை வருக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பதவி விலகலும் தகுதிநீக்கமும்
- குடியரசுத் தலைவர் பதவி விலக விரும்பினால், ராஜிநாமா கடிதத்தை குடியரசு துணைத் தலைவரிடம் வழங்க வேண்டும்.
- குடியரசுத் தலைவரை தகுதிநீக்கம் செய்வதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும்.