கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் தீராமல் இருக்கும் நிலையில், தற்போது 'மார்பர்க்' என்று ஒரு வைரஸ் உருவாகியுள்ளது.
கானா நாட்டில் இருவர் மார்பர்க் வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்தனர். இந்த வைரஸானது கொரோனாவை போல், பழந்தின்னி வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாக கூறப்படுகிறது.
மார்பர்க் வைரஸால் பாதிக்கப்படக் கூடியவர்கள் மிகக் கடுமையான உடல்நலக் கோளாறு முதல் மரணம் வரை ஏற்படலாம். முதல் முறையாக 1967 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அப்போதே பல நாடுகளில் பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.
தற்போது இந்த வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.