பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகை கஜோலின் மகளான நைசா தேவ்கன்(Nysa Devgan), மதுபான பார்ட்டி ஒன்றில் ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Kajol's Daughter Nysa Gets Trolled For Drinking And Dancing In Greece


பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களும் அவர்களின் வாரிசுகள் சிலரும் போதைப் பொருட்களுடன் சிக்கி வருவது அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான், போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் நடந்த பார்ட்டியில், ஆர்யன் கான் மது குடிப்பது போன்ற வீடியோ சமூக  வலைதளங்களில் வைரலானது.
இதை தொடர்ந்து தற்பொழுது பாலிவுட் நடிகர் ஒருவரின் மகள் குடிபோதையில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் வேறு யாருமல்ல, அஜய் தேவ்கான், கஜோல் தம்பதியரின் மகளான நைசா தேவ்கன் தான். வெளிநாட்டு பயணத்தின்போது தனது நண்பர்களுடன் குடிபோதையில் நைசா ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பொதுவெளியில் நடிகை, நடிகர்கள் குடித் துவிட்டு ஆடும் சம்பவம் அடிக்கடி நடப்பதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நைசாவின் இந்த செயலையும் கண்டித்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.