ஆற்காடு அருகே தீ விபத்தில் குடிசை கருகி சாம்பல் ஆனது.
ஆற்காடு அடுத்த பரதராமி காமராஜ் நகர் ஓம் சக்தி தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (60). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஓலை குடிசை காட்டியுள் ளார். இதில் அவரது மகள் மகாலட்சுமி(40) என்பவர் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.
நேற்று முன்தினம் திடீரென அந்த குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் பரிமளா தேவி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்த னர்.
அதற்குள் குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த பொருட்களும் கருகியது. தீப்பி டித்த போது குடிசையில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.