குறள் : 817

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்


மு.வ உரை :

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.


கலைஞர் உரை :

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்


சாலமன் பாப்பையா உரை :

சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.


Kural 817

Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal

Paththatuththa Koti Urum


Explanation :

What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.

Horoscope Today: Astrological prediction for July 21, 2022


இன்றைய ராசிப்பலன் - 21.07.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

21-07-2022, ஆடி 05, வியாழக்கிழமை, அஷ்டமி திதி காலை 08.12 வரை பின்பு தேய்பிறை நவமி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 02.17 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பகல் 02.17 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Nalla Neram 

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

சூரிய உதயம் 6.1 கடக லக்கனம் இருப்பு நாழிகை 4 விநாடி 48


இன்றைய ராசிப்பலன் - 21.07.2022 | Today rasi palan - 21.07.2022


மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல் செய்தால் லாபம் அடையலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த தொழில் ரீதியான வங்கி கடன் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிட்டும். வருமானம் பெருகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் ஒருசில அனுகூலப் பலன் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். 

சிம்மம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

கன்னி

இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் உபாதைகள் நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

விருச்சிகம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழில் ரீதியான பிரச்சினைகள் குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறை நீங்கும். எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

மகரம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மன கஷ்டங்கள் தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபார ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும்.

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உற்சாகமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001