குறள் : 814
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
மு.வ உரை :
போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.
கலைஞர் உரை :
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்
சாலமன் பாப்பையா உரை :
போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது.
Kural 814
Amarakaththu Aatrarukkum Kallaamaa Annaar
Thamarin Thanimai Thalai
Explanation :
Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.
Horoscope Today: Astrological prediction for July 18, 2022
இன்றைய ராசிப்பலன் - 18.07.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
18-07-2022, ஆடி 02, திங்கட்கிழமை, பஞ்சமி திதி காலை 08.55 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 12.23 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பகல் 12.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla neram
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
சூரிய உதயம் 6.1 கடக லக்கனம் இருப்பு நாழிகை 5 விநாடி 19
இன்றைய ராசிப்பலன் - 18.07.2022 | Today rasi palan - 18.07.2022
மேஷம்
இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
இன்று நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
கடகம்
இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாது இருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
கன்னி
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
துலாம்
இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். சுப சுபமுயற்சிகளில் இடையூறு உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.
மகரம்
இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
கும்பம்
இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001