அரக்கோணம் அருகே பனை மரங்களை வெட்டி லாரியில் கடத்த முயன்ற 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களைதே டிவருகின்றனர்.

Cutting palm trees near Arakkonam and smuggle them in a truck



தமிழகம்முழுவதும் நிலத்தடி நீருக்கு வழி வகை செய்யும் பனை மரங்களை வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வெட்டுவோர் மீது வழக்குப்பதியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்ப்பாக்கம் ஊராட்சி ராஜாபாளையம் பகுதியில் சிலர் பனை மரங்களை வெட்டி கடத்துவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இரவு அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், வருவாய் ஆய்வாளர் ஜெயபால், விஏஓ மனோன்மணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு ஒரு லாரியில் பனை மரங்களை துண்டுதுண்டாக வெட்டி ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து விஏஓ மனோன்மணியம் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் நேற்று முன் தின்ம 5 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களை தேடிவருகின்றனர்.