தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பராமரிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழ்க் கண்ட மின்சார ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
அரக்கோணம்-வேலூர் இடையே காலை 7.10 மணி, மதியம் 2.05 மணிக்கும், மறுமார்க்கமாக வேலூர்-அரக்கோணம் இடையே காலை 10 மணி, மாலை 5.10 மணிக்கும், அரக்கோணம்-காட்பாடி இடையே இரவு 9 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை முதல் மீண்டும் இயக்கப் படும்.
காட்பாடி-அரக்கோணம் இடையே காலை 4.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) முதல் மீண்டும் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.