*சிறுநீர் கல் கரைய இயற்கை முறையில் வைத்தியம் - கல் கரைய சூரணம் செய்யும் முறை*
*தேவையான மூலப்பொருட்கள்:*
1.சிறுபீளை – 50 கிராம்
2.சிறுநெருஞ்சில் -50 கிராம்
3.காய்ந்த மலைநெல்லி – 50 கிராம்
4.கடுக்காய் – 50 கிராம்
5.தான்றிக்காய் – 50 கிராம்
6.மஞ்சள் – 50 கிராம்
7.சாரணைவேர் – 50 கிராம்
*செய்முறை விளக்கம்:*
👉 மேலே உள்ள மூலப்பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சம அளவு வாங்கி வெயிலில் நன்கு காய வைத்து கொள்ளுங்கள்
👉 தோல் நீக்க வேண்டியவற்றில் தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள்
👉 பிறகு அனைத்தும் ஒன்றாக சேர்த்து அரைத்து சலித்து வைத்து கொள்ளுங்கள்
👉 இந்த சூரணம் காற்று மற்றும் ஈரப்பதம் பட கூடாது...
*சாப்பிடும் முறை:*
தினசரி காலை மற்றும் இரவு உணவுக்கு பின் 100-மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து குடிக்கவும் இதை தொடர்ந்து 3 வாரம் எடுக்க வேண்டும்...கல் வெளியே வந்த பிறகும் 3 வாரம் வரை நிறுத்த கூடாது...
*மருத்துவ பயன்கள்:*
🔅 இந்த சூரணம் முறைப்படி சாப்பிடும் பொழுது 1MM முதல் 10MM வரை வரை உள்ள கற்கள் உடைந்து வெளிவரும் அதிக அளவு இருப்பின் மேலும் தொடர்ந்து எடுக்க படி படியாக உடையும்
🔅 விரைவான பலன் கிடைக்க பூனை மீசை துளசியை காசாயம் போல செய்து வெறும் வயிற்றில் குடித்தால் மேலும் பலன் அதிகம் கிடைக்கும்