அதிக அளவு கலோரி உள்ள முதல் பழம் அவாகோடா! நோய் தீர்க்கும் பழம் 

உயர்தரமான பழ உணவாகவும் மருந்தாகவும் உள்ள அவாகோடா பழம், எளிதில் ஆவியாகக்கூடிய கொழுப்பு சம்பந்தமான அமிலத்தையும் பெற்றுள்ளது.

பழங்களிலேயே அதிக அளவு கலோரி உள்ள பழம் அவாகோடாதான். இப்பழத்தில் கண்களுக்கு பார்வைத்திறன் தரும் வைட்டமின் ஏவும் தாராளமாக உள்ளது.

100 கிராம் பழத்தில் 160 முதல் 225 சதவிகித கலோரியும், 2% புரதமும், 23% கொழுப்பும், ஒரு சதவிகித மாவுச்சத்தும் உள்ளன. தாது உப்புகளில் மூளைக்குப் புத்துணர்வு தரும் பாஸ்பரஸ் உப்பு 80 மில்லி கிராமும், கால்சியம் 10 மில்லி கிராமும் சிறிதளவு இரும்புச்சத்தும் கொண்டது அவாகோடா.

தொற்றுநோயை விரட்டியடிக்கும் அற்புதப் பழம் 


இதயத்தைப் பாதுகாக்க!


இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் அதாவது கொழுப்பு அடைக்காமல் பார்த்துக்கொள்ளும் முதல் ஐந்து உணவுகளுக்குள் அவாகோடா 80% நல்ல கொழுப்பைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. (மற்றவை ஹேசல்நட்ஸ் 81%, ஆலிவ் எண்ணெய் 72%, பாதாம் பருப்பு 71%, கனோலா எண்ணெய் 60%) எனவே, மாரடைப்போ, இதய நோய்களோ இன்றி நீண்ட நாள்கள் வாழ அவாகோடா பழத்தையும், அவாகோடா எண்ணெயையும் சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியம். இதனால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் (எச்.டி.எல்) அளவு குறையும்.

இஸ்ரேல் நாட்டில் தினமும் ஓர் அவாகோடா பழம் வீதம் மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தவர்களின் ரத்தத்தில் 12% கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்தது நிரூபணமாகியுள்ளது. மேலும் விந்து உற்பத்திக்கு வைட்டமின் சி தேவை. இவற்றைப் பெற மூன்று ஆரஞ்சுப் பழம் அல்லது 3 கப் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாப்பிட வேண்டும். அதற்குப் பிறகும் வைட்டமின் சி தடையின்றி கிடைத்து விந்து உற்பத்தி அதிகரிக்க அவாகோடா பழம் ஒன்றோ அல்லது அஸ்பராகஸ் கீரை (தண்ணீர் விட்டான் கிழங்கு) ஒரு கப்போ சாப்பிட்டால் போதும். இவற்றில் உள்ள குளூட்டாதின் என்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் விந்து உற்பத்தி தடையில்லாமல் உற்பத்தியாக உதவும். எனவே,ஆண்,பெண் இருவருமே மூன்று ஆரஞ்சுப் பழமும், ஒன்றிரண்டு அவாகோடா பழமும் சாப்பிட்டு வந்தால் தாம்பத்ய உறவு சிறப்பாக இருக்கும். மலட்டுத் தன்மையும் குணமாகும். தர்பூசணி பழத்தில் உள்ளது போலவே அவாகோடாவில் தாராளமாக உள்ள குளூட்டாதின் காட்ராக்ட் பிரச்னை வராமல் கண்களைப்

பாதுகாக்கின்றன. அவாகோடா பழத்தில் தாராளமாக உள்ள, சக்திவாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் முப்பது வகையான புற்றுநோய்க்காரணிகளை யும், எய்ட்ஸ் வைரஸையும் வேருடன் அழிக்கின்றன. எனவே, இதயத்தைப் பாதுகாக்கவும், புற்றுநோய் இன்றி வாழவும் தினமும் இரண்டு அவாகோடா பழங்களாவது சாப்பிட்டு வருவது ஆயுளை நீட்டிக்கும் ஓர் எளிய அரிய ரகசியமாகும்.

அவாகோடா பழம், பேரிக்காய் வடிவிலும், சில பழங்கள் உருண்டை வடிவிலும் இருக்கும். பழங்களிலேயே ஊட்டச்சத்து மிக்க அவாகோடா பச்சை, சிவப்பு, பழுப்பு, இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களிலும் கிடைக்கின்றன. மெக்சிகன், குவாட்டிமாலா, வெஸ்ட் இந்தியன் என்னும் மூன்று வகையான பழங்களே அவாகோடாவில் முக்கியமான இனங்கள்.

பச்சடி, கிச்சடி, சூப் மற்றும் விருந்துகளில் சிறப்பு உணவு என்று விதவிதமான முறைகளில் இப்பழத்தைப் பயன்படுத்துகின்றனர்.

உடல் உறுதிபெற:


அவாகோடா உயர்தரமான புரதச்சத்து நிறைந்துள்ள பழம் என்பதால் அதைப் பாலுடன் சேர்த்து அருந்தினாலே போதும். அரிசி உணவு, கோதுமை உணவு ஆகியவற்றிற்கு ஈடான சக்தியை ஒரே ஒரு அவாகோடா பழமும் ஒரு கோப்பைப் பாலும் தந்துவிடும்.

இதில் உள்ள வைட்டமின் ஏ, நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கித்தருகிறது. வைட்டமின் சி, வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி நன்கு ஜீரணமாகச் செய்கிறது. சிறு குழந்தைகள் மெலிந்தும் உடல் குன்றியும் காணப்பட்டால் இப்பழத்தின் தசையைப் பாலில் கலந்து கொடுத்தால் போதும். குழந்தை உடல் உறுதிபெற்று வளரும்.

தினமும் 'டானிக்' போல் இந்தப் பழத்தையும் ஒரு கோப்பைப் பாலையும் சாப்பிட்டு வந்தால் எந்த வயதுக்காரரையும் தொற்றுநோய் அணுகவே அணுகாது.

மூளை துடிப்புடன் இருக்க...


இப்பழத்தில் உள்ள தாராளமாக உள்ள பாஸ்பரஸ் உப்பு, நரம்பு மண்டலத்தில் புதிய செல்களை உருவாக்குவதுடன் மாவுச் சத்தும் கொழுப்பும் உடனடியாகக் கரைந்து ஜீரணமாகவும் உதவுகிறது. மேலும் நரம்பு மண்டலத்தையும் மூளையையும் தூண்டிவிட்டு விழிப்புடன் வைத்திருக்கவும் இந்த பாஸ்பரஸ் உதவுகிறது. 100 கிராம் பழத்தசையில் 80 மில்லி கிராம் அளவுக்கு பாஸ்பரஸ் உப்பு உள்ளது. இப்பழத்தில் உள்ள கால்சியம் வயிற்றுப் பாகத்தில் தொந்தி ஏற்பட்டுவிடாமலும் அஜீரணக் கோளாறுகள் நேராமலும் பாதுகாக்கிறது.

வயிற்றுவலியா?


வயிற்றில் அதிகமாகப் புளிப்புத்தன்மை உள்ள பொருள்கள் சேர்ந்து வயிற்றுவலி போன்றவை ஏற்பட்டால், பழுத்த பப்பாளிப் பழத்துடன் இந்த அவாகோடா பழத்தையும் சேர்த்துச் சாப்பிட்டால் போதும். வயிற்றுவலி உடனே குணமாகும். தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களுக்கு பப்பாளிப் பழத்துடன் அவாகோடாவையும் சேர்த்துச் சாப்பிட்டு வருவது மிக முக்கியம். இதனால் வயிற்றுவலி பூரணமாகக் குணமாகும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் புண், வீக்கம் முதலியவற்றைக் குணமாக்க நவீன மருத்துவத்தில் இந்த இரு பழங்களையுமே சேர்த்துச் சாப்பிடச் சொல்லுகிறார்கள்.

சொறி, சிரங்கு


சொறி, சிரங்கு உள்ளவர்கள் அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிட்டும். இப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயையும் உடம்பில் தேய்த்து வரவும்.

இப்பழத்தில் உள்ள வைட்டமின் சி புற்றுநோய்க்காரணிகளையும் அடித்து விரட்டுகிறது. வைட்டமின் ஈ மலட்டுத் தன்மையைக் குணமாக்குகிறது.

தோல் நோயா?


தோல் நோயால் அவதிப்படுகிறவர்கள் அவாகோடா பழத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை உடம்பு முழுவதும் நன்கு தேய்த்துக் குளித்து வந்தால் அந்த வியாதியிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

எண்ணெயைப் பயன்படுத்துவதுடன் தோல் நோயாளிகள் தினமும் அவாகோடா பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் உடனே விரைவாகக் குணமாகத் தொடங்கும்.

இந்தப் பழ எண்ணெயை அழகு சாதனப் பொருள்களில் முக்கிய மூலப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். ஷாம்பு, குளியல் எண்ணெய் போன்றவற்றிலும் இந்த எண்ணெயைச் சேர்க்கின்றனர்.

கொழுப்பு சேராத கொழுப்பு நிறைந்த பழம்! 


எந்தப் பழத்தையும் விட, அதிக அளவு கொழுப்புச்சத்து உள்ள பழம் அவாகோடா. ஆனால், இது எளிதில் ஆவியாகிற எண்ணெய்ப்பசை உள்ள அமிலமாக இருக்கிறது. இதனால் தேவையான அளவுக்கு மேல் உடலில் கொழுப்புச் சேர்வதில்லை. எனவே, கொழுப்புச் சத்துள்ள இந்தப் பழத்தை பயமில்லாமல் நன்கு சாப்பிடலாம். ரத்தக்குழாய்களில் கொழுப்புச் சேராது.

உடனுக்குடன் சாப்பிடுக!


ஒரே ஒரு பெரிய விதையுடன் பேரிக்காயைப் போலக் காணப்படும் இப்பழத்தை உடனுக்குடன் சாப்பிட வேண்டும். பெரிய விதையைச் சுற்றி வெண்ணெய் போன்ற தசை இருக்கும். இதை உடனுக்குடன் சாப்பிட்டால்தான் நல்ல பலன் கிடைக்கும். வீட்டில் சேமித்து வைத்துச் சாப்பிட வேண்டாம். கடையில் வாங்கி வந்ததும் உடனே சாப்பிட்டு விடுங்கள்.

வாய் நாற்றமா?


சிலர் பேசும்போது வாய் துர்நாற்றம் வீசும். அந்தத் துர்நாற்றம் அகல இந்த அவாகோடா பழம் பயன்படுகிறது. இது குடல்களைச் சுத்தப்படுத்திக் கழிவுகளை வெளியேற்றி விடுவதால் வாய்துர்நாற்றம் அகன்று விடுகிறது. மலச் சிக்கல் உள்ளவர்களும், தினமும் அசைவம் சாப்பிடுகிறவர்களும், வாய் துர்நாற்றம் வீசுவதை அகற்றிக் கொள்ளவும், தங்கள் குடல்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இப்பழத்தைத் தினமும் சாப்பிட்டு வரவும்.