Action will be taken against those who have not started the work after receiving money in the PM house building project
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, காவேரிப்பாக்கம் உள்ளிட்ட யூனியன்களுக்கு உட்பட்ட கிராம பஞ்.களில் நடந்து வரும் திட்டப்பணிகளை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காவேரிப்பாக்கம் யூனியனுக்கு உட்பட்ட கர்ணாவூர் பஞ்.ல் ரூ.ஒரு கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் திட்டப்பணிகளை திட்ட இயக்குனர் லோகநாயகி ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
ராணிப்பேட்டை திட்ட இயக்குனர் எச்சரிக்கை
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2017-2018ம் ஆண்டுகளில் முதல் தவணை பணம் பெற்றுக் கொண்டும் வீடு கட்டும் பணிகளை தொடங்காதவர்கள் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தொகுப்பு வீடு பயனாளிகள் குறித்து விவரம் சேகரித்து அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க பிடிஓகளுக்கு உத்தரவிட்டார். மேலும், புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடம், நுாலகம் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது காவேரிப்பாக்கம் பிடிஓ அன்பரசன், துணை பிடிஓ ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.