தமிழக மின்துறையில் கடன் அதிகரித்து வருவதால் மின் கட்டணத்தை உயர்த்துவதாகவும், மின் கட்டணத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த 10 ஆண்டுகளில் மின் துறையின் கடன், 12,647 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் மின் கட்டண மாற்றத்திற்கு மத்திய அரசும் பதில் அளித்துள்ளது. 28 கடிதங்கள் உள்ளன. மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரியை தனியாரிடமிருந்து வாங்க வேண்டும். இது மின் கட்டணத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
42% மின் இணைப்புதாரர்களுக்கு கட்டணத்தில் மாற்றம் இருக்காதுஅமைச்சர் செந்தில் பாலாஜி
- 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2 மாதங்களுக்கு ரூ.55 உயரும் வகையில் கட்டணம் மாற்றம்.
- 301-400 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை.
- விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் மாற்றமில்லை.
- இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.297.50 மின் கட்டணம் உயர்த்த முடிவு.
- 2 மாதங்களில் 501-600 யூனிட்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.310 உயரும்.
- 2 மாதங்களில் 601-700 யூனிட்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.550 உயரும்.
- ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 65 காசுகள் உயரும்.