குறள் : 824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
மு.வ உரை :
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
கலைஞர் உரை :
சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்
சாலமன் பாப்பையா உரை :
நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.
Kural 824
Mukaththin Iniya Nakaaa Akaththinnaa
Vanjarai Anjap Patum
Explanation :
One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.
Horoscope Today: Astrological prediction for July 28, 2022
இன்றைய ராசிப்பலன் - 28.07.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
28-07-2022, ஆடி 12, வியாழக்கிழமை, அமாவாசை திதி இரவு 11.25 வரை பின்பு வளர்பிறை பிரதமை. புனர்பூசம் நட்சத்திரம் காலை 07.04 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் காலை 07.04 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ ஆடி அமாவாசை.
இராகு காலம் | Indraya Nalla Neram
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
சூரிய உதயம் 6.2 கடக லக்கனம் இருப்பு நாழிகை 3 விநாடி 33
இன்றைய ராசிப்பலன் - 28.07.2022 | Today rasi palan - 28.07.2022
மேஷம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மனநிம்மதி குறையும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். நவீன பொருட்கள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல் படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது.
தனுசு
இன்று உங்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.
மகரம்
இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக புதிய நபர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். செலவுகள் குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். தேவையற்ற அலைச்சல்கள் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001