குறள் : 812
உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
மு.வ உரை :
தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன் இழந்தாலும் என்ன பயன்.
கலைஞர் உரை :
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?
சாலமன் பாப்பையா உரை :
தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?
Kural 812
Urinnattu Arinoruum Oppilaar Kenmai
Perinum Izhappinum En
Explanation :
Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ?
Horoscope Today: Astrological prediction for July 16, 2022
இராகு காலம் | Indraya Nalla Neram
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
சூரிய உதயம் 6.0 மிதுன லக்கனம் இருப்பு நாழிகை 0 விநாடி 10
இன்றைய ராசிப்பலன் - 16.07.2022 | Today rasi palan - 16.07.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். திருமண முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கடகம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
சிம்மம்
இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் புதிய முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.
தனுசு
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிட்டும். வருமானம் பெருகும். கடன் பிரச்சினை தீரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
கும்பம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வேலை விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.