புற்றுநோய், சர்க்கரை நோய்களுக்கான மருந்து விலையை 70 சதவீதம் வரை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
பல்வேறு உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. இதன்படி, தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ள, 355 க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், பெரும்பாலான மருந்துகளின் அதிகப்பட்ச விலை வரம்பு அதிகமாக உள்ளதால், நோயாளிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில், 41 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலை வரம்பு 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்த மருந்துகளின் குறைந்தபட்ச விலை 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டது.

இந்நிலையில், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற தீவிர நோய்களுக்கான மருந்து விலையை மேலும் குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.