வழக்கத்தை விட 6 நாள் முன்னதாக நாடு முழுவதும் பரவிய பருவமழை
தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு மே 29ம் தேதியே தொடங்கி விட்டது.
அதேபோல், பருவமழை வழக்கத்தை விட 6 நாட்களுக்கு முன்பாக நாடு முழு வதும் பரவி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு ராஜஸ்தான் மற்றும் வடக்கு குஜராத் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
எனினும், நேற்றைய நிலவரப்படி நாட்டில் 5 சதவீத மழைப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது.
ஒடிஷா, குஜராத், கொங்கன், கோவா ஆகிய பகுதிகளிலும், மத்திய இந்தியா விலும் நாளை முதல் வரும் 6ம் தேதி வரை நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
வடக்கு ஓடிஷா கடல் பகுதியில் வடக்கு ஓடிஷா கடல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதற்கான அறிகுறி தெரிகிறது என்றும், இது பருவமழையை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.