வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் 332 பேர் தேர்வு எழுதினர். 68 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதும் மையத்தின் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தேர்வு அலுவலராக தேர்வு எழுத வந்தவர்களை கண்காணித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூர் பகுதியைச்சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ஞானபிரியா (வயது 24). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.இவர் பள்ளிகொண்டா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதவந்தார். 2 1/2 அடிஉயரம் உள்ள இவர் சரியாக நடக்க முடியாததால் அவரது தம்பி தூக்கி வந்து தேர்வு மையத்தில் அமர வைத்தார். இவரை தேர்வு எழுத வந்தவர்கள் அதிசயமாக பார்த்தனர்.
தேர்வு மையத்தை அணைக்கட்டு தாசிதார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.