Aadi Krithigai 2022 in Tamil

ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அவரது ஜென்ம நட்சத்திரமும் ஆயிற்றே!!! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து தண்டபாணியை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர்.

ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது. ஏன்? முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும்.

அம்பிகையின் அம்சமே வேல் எனவும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு.

அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம். 

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!! 
வேல்வேல் முருகா வெற்றிவேல் 
தணிகை மலைப் படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் - அங்கே 
தனை மறந்து மயில்கள் எல்லாம் நாட்டியம் ஆடும்!
கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி - அதைக் 
காண்பவர்க்கு எந்தநாளும் இல்லையே வீழ்ச்சி! 
விளங்கிவரும் சேவற்கொடி விண்ணதில் ஆடும் - அது 
வேல்முருகன் அடியவர்தம் வினையினைச் சாடும்
குலுங்கி வரும் தென்றல் அங்கே இசை முழக்கும் - திருக்குமரன் பேரைச் சொல்லிச் சொல்லி நம்மை மயக்கும்!

ஆடிக்கிருத்திகை அன்று முருகன் கோயில்கள் அனைத்திலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் .ஆடிக் கிருத்திகை திருநாளில் 10 லட்சம் காவடிகள் எடுத்து மிகப் பிரம்மாண்டமான திருவிழாவாகக்கொண்டாட்ப்படுகிறது.

அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளை கொண்டாடுகிறார்கள்.
மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின்போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார். 

வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்திருக்கிறது .

ஒரு லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் உற்சவர் சன்னதியாக உள்ளது

முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. 

ஆபத்சகாய விநாயகரை கடைசியாகத்தான் வணங்குதல் வேண்டுமாம்.

திருத்தணியில் முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. 

இந்த சந்தனத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். 

இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.

முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, ஆடி கிருத்திகைமிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர். மலர்க்காவடி வாடகைக்கு கிடைக்கிறது.
வள்ளியின் திருமணத்தலம். முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து தங்கியதால் "தணிகை மலை' என்று பெயர் பெற்று "திருத்தணி' என்று மாறியது.
அசுரனோடு மோதியதன் காரணமாக மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறது. 

முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக் கிழமையும், நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.  

கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னி பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப்பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப்படுகிறது. 

இப்படி சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் `சரவணபவ' என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது முருகனே என்பது அருணகிரியார் கூற்று. கார்த்திகை விரதமே கார்த்திகை பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக்கூறுவார்கள். 
சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி போற்றி வளர்த்ததும், குமாரன் வளர்ந்ததும், அவனை சேர்த்து ஒன்றாக்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்' எனவும் அழைக்கப்படுவான் என்று சொன்னார். 

மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்கு குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார். இந்த கார்த்திகை விரதம் தான் கிருத்திகை விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. 

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே கிருத்திகை விரதம் இருப்பவர்களுக்கும் பொருந்தும். என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாகக் கருதுகின்றனர். 
உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. ஆடி மாத கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தட்சணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயணம் திருமணம், உபநயனம், கிரகப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது. 

ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்து கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
 
அதனால் தான் தை மாதக் கார்த்திகையை விட ஆடிக்கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

ஞானத்தின் வடிவான முருகப் பெருமான், ஞானப் பழத்துக்காக அம்மா, அப்பாவான பார்வதி பரமேஸ்வரனிடம் சண்டை போட்டுக் கொண்டு திருப்பழநிக்குன்றத்தில் நின்றது புராணக் கதை. அதுமுதல் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். தடைகள், தோஷங்கள், கவலைகள் நீங்கி தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது. அந்த வகையில் ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.

‘ஆறுமுக உருவாய்த் தோன்றி
அருளொடு சரவணத்தின்
வெறிகமழ் கமலப்போதில்
வீற்றிருந்து அருளினானே’ 

என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுகிறது. வாரம், திதி, நட்சத்திரம் என்று இந்த மூன்றிலும் முருகனுக்கு விரதங்கள் உண்டு. வாரம் என்பது வாரத்தின் நாட்களை குறிக்கும். இதில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள். திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கார்த்திகை’ அல்லது ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற, அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சூரபத்மனை அழித்து தேவர்களையும், மக்களையும் காப்பதற்காக அவதாரம் எடுத்த ஆறுமுகனை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். அவர்களை போற்றும் வகையிலேயே கிருத்திகை விரத திருநாள் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைபெறும்.

காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும், சிறப்பு பூஜைகள், பிராத்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர். கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். 

கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகளை பக்தி சிரத்தையுடன் பாடி விரதத்தை முடிக்கின்றனர்.

அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றிப் புகழ்கிறது. 
திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மான சீகமாக வழிபட்டாலும், ‘திருத்தணிகை’ என்ற பெயரை சொன்னாலும் நம் தவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு. 

முருகப் பெருமான் இத்தலத்தில் ஞானசக்தியாகிய வேலை தாங்கி நிற்கிறார். முருகனின் 16 வகையான திருக்கோலங்களில் இங்கு ‘ஞான சக்திதரர்’ என்னும் திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, கர்மபுத்திர தோஷம், குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் தடங்கல்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானின் திருவருள் பெறுவோம்.

முருகப்பெருமானின் திருக்கரத்தினில் திகழும் ஆயுதங்களுள் மிகச் சிறப்புடையது வேல்!..

'' வெல்லுவது வேல்!..'' என்னும் சொற்குறிப்பினை உடையது.
வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன் 
வெற்றி பெறு சுடராழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்கல்லி
வெல்லாது எனக் கருதியே.. 
சங்க்ராம நீ சயித்து அருள் எனத்தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்

என முருகனின் வேலாயுதத்தினை, அருணகிரிநாதர் புகழ்ந்து பாடுகின்றார்.

வேல் - வெம்பகையை மட்டும் என்றில்லை!.. வெவ்வினையையும் வென்று தீர்ப்பது!.. அதனால் தான் -
 
''..வேலுண்டு வினையில்லை!..'' என்று இனிதாகச் சொல்லி வைத்தனர். 

வேலினை ஞானத்தின் அடையாளம் என வர்ணிப்பர்.
வேலனின் திருப்பெயர்கள் ஒன்றா!.. இரண்டா!.. - சொல்லச் சொல்ல இனிப்பவை. அல்லலுற்று - அவதுயுற்று அடைக்கலம் தேடி வரும் அன்பர் தம் மனக் குகையில் நித்ய வாசம் செய்து - இருளினை ஓட்டி ஞானப்பிரகாசமாக விளங்குபவன். அதனால் - குகன் எனப்பட்டவன். 
வேறு ஒன்றின் துணையில்லாமல் தானே ஒளிர்ந்து பிரகாசிப்பது எதுவோ அதுவே சுப்ரமண்யம்!. 

''..சேனாதிபதிகளுக்குள் நான் ஸ்கந்தனாக இருக்கின்றேன்!..'' - என்கின்றான் பரந்தாமன்!.

ஏரகப்பதியில் - எம்பெருமானுக்குக் குருவாக அமர்ந்து ப்ரணவப் பொருளினை உரைத்து,

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க்கெல்லாம் இனிது
எனும் குறள் தோன்றுதற்கு காரணனாக விளங்கிய பூரணன்!.. 

யோகக்கலையில் மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சகஸ்ராரத்தை நோகி மேலேறும் போது மணி பூரகச் சக்கரத்திற்கு அதிபதி மயில்வாகனன்!.. அதுமட்டுமின்றி ஆக்ஞா (நெற்றி) சக்கரத்தில் ஆறு பட்டைகளுடன் கூடிய ஒளிரும் மணியாக விளங்குகின்றான் என்கின்றனர் கற்றறிந்தோர்.

வேதம் - ''சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்!'' - என்று முழங்குவதாக - குருநாதராக விளங்கும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுவார். 

அருணகிரியார், அண்ணாமலையில் முருகப்பெருமானால் தடுத்தாட்க் கொள்ளப்பட்டு, சும்மா இரு சொல்லற என உபதேசம் பெற்று தியானத்தில் ஆழ்ந்து விடுகின்றார். அதன் பின்னர் முருகப்பெருமானால் - அட்சர தீட்சை பெறுகின்றார். முத்தைத் தரு எனும் முதற் பாடல் பிறக்கின்றது. 

மீண்டும் தியானம். ''..வயலூருக்கு வா!..'' என பெருமானால் அழைக்கப்பட்டு அங்கேதான் திருப்புகழ் பாட அறிவுறுத்தப்படுகின்றார். அப்படிப் பாடுங்கால் - அங்கே வீற்றிருக்கும் பொய்யாக் கணபதியின் தாள் வணங்கிப் பாடுகின்றார். அந்தப் பாடல் தான் - ''..கைத்தல நிறைகனி..'' எனத் தொடங்கும் இனிமையான பாடல். 
அதிலே, ''..வள்ளிநாயகியின் மீது கொண்ட காதலால் துயருறும் சுப்பிர மணியனின் துயர் தீர, தினைக் காட்டுக்குள் யானையாகத் தோன்றி - குறவர் தம் குலக்கொடியாகிய வள்ளி நாயகியுடன், உனக்கு இளையோனாகிய முருகனை மணமுடித்து வைத்த பெருமானே!..''- 

எனப் போற்றுவது சிந்திக்கத் தக்கது. 

அப்படி அருணகிரியாரால் உச்சரிக்கப்பட்ட திருப்பெயர் - மந்திரத்தின் மறு வடிவான சுப்ரமண்யம் என்பதாகும்!..
முருகன் - தமிழருடன் இணைந்த ஒரு சொல் என்று சொல்லி விட்டு என்ன - வடமொழியை கொண்டு வந்து புகுத்துகின்றீர்களே!..
தேவாரத்தில் அப்பர் பெருமான் அழகாகச் சொல்கின்றார்.
ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே! (6/23/5)
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண்...
சிவனவன்காண் சிவபுரத்து எம்செல்வன் தானே!   
அப்பனே அப்படி - சர்வ வியாபியாகத் திகழ்ந்து பரிபாலிக்கும் போது, மகன் மட்டும் என்ன - தனித்தா இருப்பான்!... மொழிக்கெல்லாம் அப்பாற்பட்ட மூலப்பரம் பொருள் அல்லவா - முருகன்!..
அத்தகைய அரும்பொருள் - ஆறுமுகத்தரசு - அருள் மழை பொழிய வேண்டும் என்று அன்பரெல்லாம் கூடிக் கொண்டாடும் நல்ல நாட்களுள் ஒன்றுதான் கிருத்திகை!.. 

அதிலும் ஆடிக்கிருத்திகை - அளவிடற்கரிய பெருமைகளை உடையது!..

ஐந்தாம் படைவீடாகிய திருத்தணிகையில் பெருந்திருவிழா நிகழ்கின்றது!.. லட்சக் கணக்கில் பக்தர்கள் கூடி மகிழ்கின்றனர். இந்த வேளையில் -
இருமலு ரோக முயலகன் வாத
எரிகுண நாசி விடமே நீ
ரிழிவுவிடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயிறீளை எரிகுலை சூலை
பெருவலி வேறுமுள நோய்கள்
பிறவிகள் தோறும் எனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே!.. 
வருமொரு கோடி அசுரபதாதி
மடிய அநேக இசைபாடி
வருமொரு கால வயிரவராட 
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!... 
- என, எல்லாம் வல்ல எம்பெருமானாகிய கந்தவேளின் மலர்த் தாமரைகளைச் சிந்தித்து - நோய் நொடியில்லாத நல்வாழ்வினைப் பெறுவோமாக!...

சுப்ரம்மண்யோம்!.. சுப்ரம்மண்யோம்!.. சுப்ரம்மண்யோம்!..
முருகன் மந்திரம் .

முருகு என்றால் அழகு. அழகே வடிவானவன் முருகன். கார்த்திகை பெண்கள் வளர்த்த காரணத்தால் கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றவர். ஆறு குழந்தைகளாகப் பிறந்து அன்னையின் அரவணைப்பின் போது ஆறுமுகனாகத் தோன்றியவர். கணங்களின் அதிபதியாக விளங்கும் விநாயகரின் தம்பி ஆவார். இவர் சுப்பிரமணியர் என்றும் போற்றப்படுகிறார். 

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை. என்று கூறுவார்கள். சூரனை வதம் செய்து வேல் தாங்கி நிற்கும் முருகனை வணங்கினால் வாழ்வில் வரும் துயர்கள் யாவும் நீங்கும். ஓம் எனும் பிரணவத்தை கூறிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் வேலாயுதமாக உள்ளார்.

வாழ்வை வளமாக்கும் முருகன் காயத்ரி மந்திரம்
ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி!
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்!
முருகனின் அருளைப் பெற முருகன் போற்றி!!
முருகன் போற்றி 
ஓம் ஆறுமுகனே போற்றி 
ஓம் ஆண்டியே போற்றி 
ஓம் அரன் மகனே போற்றி 
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி 
ஓம் அழகா போற்றி 
ஓம் அபயா போற்றி 
ஓம் ஆதிமூலமே போற்றி 
ஓம் ஆவினன் குடியோய் போற்றி 
ஓம் இறைவனே போற்றி 
ஓம் இளையவனே போற்றி 
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி 
ஓம் ஈசன் மைந்தனே போற்றி
ஓம் ஈராறு கண்ணனே போற்றி 
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி 
ஓம் ஒன்றே போற்றி 
ஓம் ஓங்காரனே போற்றி 
ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி
ஓம் ஔவைக்கருளியவனே போற்றி 
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி 
ஓம் கடம்பனே போற்றி 
ஓம் கவசப்பிரியனே போற்றி 
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி 
ஓம் கிரிராஜனே போற்றி 
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் குகனே போற்றி 
ஓம் குமரனே போற்றி
ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
ஓம் குறத்தி நாதனே போற்றி 
ஓம் குரவனே போற்றி 
ஓம் குருபரனே போற்றி 
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி 
ஓம் சஷ்டி நாயகனே போற்றி 
ஓம் சரவணபவனே போற்றி 
ஓம் சரணாகதியே போற்றி 
ஓம் சத்ரு சங்காரனே போற்றி 
ஓம் சர்வேஸ்வரனே போற்றி 
ஓம் சிக்கல்பதியே போற்றி 
ஓம் சிங்காரனே போற்றி 
ஓம் சுப்பிரமணியனே போற்றி 
ஓம் சுரபூபதியே போற்றி 
ஓம் சுந்தரனே போற்றி 
ஓம் சுகுமாரனே போற்றி
ஓம் சுவாமிநாதனே போற்றி 
ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி 
ஓம் சூழ் ஒளியே போற்றி 
ஓம் சூரசம்ஹாரனே போற்றி 
ஓம் செல்வனே போற்றி 
ஓம் செந்தூர்க்காவலனே போற்றி
ஓம் சேகரனே போற்றி 
ஓம் சேவகனே போற்றி
ஓம் சேனாபதியே போற்றி 
ஓம் சேவற்கொடியோனே போற்றி
ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி 
ஓம் சோலையப்பனே போற்றி 
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி 
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி 
ஓம் ஞானோபதேசியே போற்றி 
ஓம் தணிகாசலனே போற்றி 
ஓம் தயாபரனே போற்றி 
ஓம் தண்டாயுதபாணியே போற்றி 
ஓம் தகப்பன் சாமியே போற்றி 
ஓம் திருவே போற்றி 
ஓம் திங்களே போற்றி 
ஓம் திருவருளே போற்றி
ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி 
ஓம் துணைவா போற்றி 
ஓம் துரந்தரா போற்றி 
ஓம் தென்பரங்குன்றனே போற்றி 
ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி 
ஓம் தேவசேனாபதியே போற்றி 
ஓம் தேவனே போற்றி 
ஓம் தேயனே போற்றி 
ஓம் நாதனே போற்றி 
ஓம் நிமலனே போற்றி 
ஓம் நிறணந்தவனே போற்றி 
ஓம் பிரணவமே போற்றி 
ஓம் பரப்பிரம்மமே போற்றி 
ஓம் பழனியாண்டவனே போற்றி 
ஓம் பாலகுமாரனே போற்றி 
ஓம் பன்னிரு கையனே போற்றி
 ஓம் பகை ஒழிப்பவனே போற்றி 
ஓம் போகர் நாதனே போற்றி
முருகன் மந்திரம்

சூரசம்ஹாரனாய் விளங்கும் முருகப் பெருமானை முறைப்படி வழிபடுவதன் மூலம் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். அல்லல் தரும் தொல்லைகள் யாவும் நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவி உறவு சிறக்கும். வேலை, திருமணம், குழந்தைப் பேறு, மற்றும் சகல பாக்கியங்களும் கிட்டும்.
முருகன் மூல மந்திரம் : 

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ
எதிர்மறை, எதிர்ப்பு எதிரி, கண் திருஷ்டியை அழிக்கும் முருகன் ஸ்துதி 
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம்
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை. இந்தப் பாடலை ஜெபம் செய்வதன் மூலம் நம்மை தீமைகள் அணுகாது காத்துக் கொள்ளலாம்.

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
     ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
    ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்
6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்
7. ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்
9. ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்
10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
     ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
     ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்
12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
      ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
     ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்
14. ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
      ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்
15. ஓம் இகபர பதயே நமோ நம ஹ
     ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்
16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
     ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
     ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்
18. ஓம் நயநய பதயே நமோ நம ஹ
     ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
     ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்
20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
    ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்
21. ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
    ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்
22. ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
    ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
    ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
    ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
    ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்
27. ஓம் அபேத பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்
28. ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
    ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்
29. ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
    ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்
30. ஓம் மயூர பதயே நமோ நம ஹ
    ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்
31. ஓம் பூத பதயே நமோ நம ஹ
     ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்
32. ஓம் வேத பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்
33. ஓம் புராண பதயே நமோ நம ஹ
    ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்
34. ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்
35. ஓம் பக்த பதயே நமோ நம ஹ
         ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்
36. ஓம் முக்த பதயே நமோ நம ஹ
    ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்
37. ஓம் அகார பதயே நமோ நம ஹ
    ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
38. ஓம் உகார பதயே நமோ நம ஹ
    ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
39. ஓம் மகார பதயே நமோ நம ஹ
     ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
40. ஓம் விகாச பதயே நமோ நம ஹ
   ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்
41. ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
     ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்
42. ஓம் பூதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்
43. ஓம் அமார பதயே நமோ நம ஹ
    ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்
44. ஓம் குமார பதயே நமோ நம ஹ.
    ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.
ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று.
அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்                                                                                                                                                          
ஓம் முருகா, குரு முருகா, 
அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே 
ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் 
நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா
ஆறெழுத்து மந்திரத்தின் அற்புத மகிமை :
ஷண்முக சடாட்சரம் – ஷட் என்றால் ஆறு - ஆறுமுகப் பெருமானின் சரஹனபவ என்னும் ஆறெழுத்து மந்திரம் ஜெபத்தால் வாழ்வில் வளமும் நலமும் பெருகும்.

1. சரஹணபவ என தொடர்ந்து ஜபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும
2. ரஹணபவச என தொடர்ந்து ஜபித்து வர செல்வம் செல்வாக்கு பெறகும் 
3. ஹணபவசர என தொடர்ந்து ஜெபித்து வர பகை, பிணி நோய்கள் தீரும்.
4. ணபவசரஹ என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.
5. பவசரஹண என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் நம்மை அவிரும்பும்
6. வசரஹணப என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி, அவர்களால் வரும் 
தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.