2 workers burnt due to gas leak in factory
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பெல் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில், நேற்று முன்தினம் தொழிலாளர்கள் கட்டிங் மிஷின் மூலம் வேலை செய்து கொண்டிருந்தனர்.
 
அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த கத்தாரிகுப்பம் பகுதியை சேர்ந்த நேதாஜி (வயது 50), செங்கல்நத்தம் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (37) ஆகிய 2 பேரும் தீக்காயம் அடைந்தனர். 

உடனடியாக அவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.