ஸ்ரீ மகா சுதர்சன சக்கரத்தாழ்வார் ஜெயந்தி 08.07.2022 சுபகிருது ஆனிமாதம் 24ம் நாள் செல்வம் பெற்று தரும் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி:
ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும்.

சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.

ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனர். இவரே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.

சக்கரத்தானை திருவாழியாழ்வான்" என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு"ஹேதிராஜன்" என்ற திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை "சக்ர ரூபஸ்ய சக்ரிண" என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள்.

பெரியாழ்வாரும் சக்கரத்தாழ்வாரை," வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு" என்று வாழ்த்துகிறார். மேலும் "என்னையும் என் உடமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு " என்று குறிப்பிடுகிறார் ..

ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில் ,"சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் "என்றே பெருமாளை பாடுகிறார் 

..திருமழிசையாழ்வார் இவரின் அம்சமாக அவதரித்தார் ..

சக்கரத்துடன் இணைந்தவரே திருமால் என்பது நம்மாழ்வாரின் வாக்கு. அவர் திருமாலுக்கு" சுடராழி வெண்சங்கேந்தி வாராய்" என்று பாமாலை சூட்டுகிறார்.

சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர்தான் என்கிறது புராணம். 

அதேபோல், திருமாலின் வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார்.அவரின் எண்ணத்தை திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார்.
 
அதேபோல் சிசுபாலனை சக்கரத்தாழ்வாரைக் கொண்டே அழித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கஜேந்திர மோட்சத்தில் சக்கரத்தாழ்வாரைக் கொண்டே முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றினார் திருமால்.

புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திட சக்கரத்தாழ்வாரே காரணம். மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திட, கிருஷ்ண பரமாத்மா ,சூரியனை மறைக்க சுதர்ஸனரையே பயன்படுத்தினார்.

துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து ,விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி ,துர்வாசரின் கர்வத்தை அடக்கியது சக்கரமே ....

இந்த சுதர்ஸனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது. சக்கரத்தாழ்வார் தனது பதினாறு ஆயுதங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

ஸ்ரீ விஷ்ணுவின் வலது கையில் உள்ள சக்கரத்தை "சுதர்சனம் என்பர். இதற்கு "நல்ல காட்சி என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருப்பது, இதன் சிறப்பு. 

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும்.(நெற்றிக்கண்) தலையில் அக்னி கிரீடம் தாங்கி, பதினாறு கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார்.

ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.

ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’.

ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.
பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.

ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் - ஆழ்வார் என்ற அடைமொழி.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர். இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர். ஸ்ரீ மகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை ஸ்ரீ சுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார். ஊலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’ என்கின்றனர்.

“புனரபி ஜனனம், -புனரபி மரணம்” (மீண்டும், மீண்டும் பிறந்து மரித்தல்) என்ற உலக நியதியான இயற்கை ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாகக் கொண்டே நிகழ்கிறது.

இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்டார்.

பல வைணவ ஆலயங்களில் நிகழும், பிரத்மோத்ஸவ விழாவின்போது, தினமும் காலை, மாலையில் ஸ்ரீ சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும்.

இந்த ஐந்து ஆயுதங்களிலும் ‘சக்கரம்’ என்ற ஸ்ரீ சுதர்சனாழ்வார்தான் முதன்மை ஆனவர். ஆகவே இவரை ‘ஐவருள் முதல்வர்’ என்கின்றனர் ஆன்றோர்.

பகவானுக்கு பஞ்சாயுதங்கள் (5). ஆனால் ஸ்ரீ சுதர்சனாழ்வானுக்கு பதினாறு ஆயுதங்கள்! ஸ்ரீ சுதர்சனர், சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, சதமுகாக்னி, மாவட்டி, தண்டம், சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலது கையிலும், இடது கையில், சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் என ஏந்தியுள்ளார்.

ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகர் ஸ்ரீ சுதர்சனாழ்வாரின் பெருமைகளை ‘ஸ்ரீ சுதர்சனாஷ்டகம்’ எனவும், அவரது பதினாறு ஆயுதங்களைப் பற்றி ‘ஷோடசாயுத’ ஸ்தோத்ரத்தையும் இயற்றி உள்ளார்.

 ஸ்ரீ மகாவிஷ்ணு, இவருக்கு “திருவாழியே உலக வாழ்வுக்கு முக்யமான, ஆயுள், ஆரோக்யம், ஐச்வர்யம.; இவற்றை இனி உம்மிடம் கேட்டாலும் மக்களுக்கு கொடும். இது தவிர வேறெந்த நல்ல விஷயம் கேட்டாலும் கொடும்” என இவருக்கு ஆணையிட்டார். இதனை ‘சுதர்ஸன சதகம்’ விளக்குகிறது.

ஜுவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும், பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால், முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்கள், கெடுதிகள் யாவும் நீங்கும்.அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும். 

புராணப் பெருமைகள் மிகுந்த, புராதனமான சில திருத்தலங்களில் - மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில், கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் ஆகியவை மிகுந்த விசேஷமானவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.

கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி திருக்கோயில்:

சுதர்சனருக்கு ஸ்ரீரங்கம், திருவெள்ளறை, திருமோகூர், கும்பகோணம், தஞ்சை கோதண்டராமர் ஆலயம், மதுரை கூடலழகர் கோயில், காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாங்கூர், திருப்பதி, நாங்குனேரி, திருக்கோவிலூர், திருவல்லிகேணி உள்ளிட்ட பல்வேறு தலங்களில் தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன. என்றாலும், சுதர்சனரே மூலவராக விளங்கும் தலம், கும்பகோணத்தில் உள்ள சக்ரபாணி திருக்கோயில் மட்டும் தான்.

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.

பீஷ்மாச்சாரியார், ‘சங்க, சக்ர, கதா, கட்கி, சார்ங்க தன்வ கதாதர:’ என சகஸ்ரநாமத்தில் விஷ்ணுவைப் போற்றுகிறார்.  

அழகு வாய்ந்த எல்லா அங்கங்களுடன் பிரகாசிப்பவரும், எட்டுக் கைகள் கொண்டவரும், மூன்று கண்கள் உடையவரும்,தித்திப் பற்களால் பயங்கரமான முகத்தை உடையவரும்,பயத்திற்கும் பயத்தை அளிப்பவரும், பயங்கரமான மஞ்சள் நிறத்தலை முடி உடையவரும், அக்னி ஜ்வாலையின் மாலைகளால் சூழப்பட்டவரும், கண்களுக்கு எட்டாதவரும், குறிப்பிட முடியாதவரும், பிரமாண்டம் முழுவதும் வியாபித்த சரீரம் உடையவரும்,
எட்டு ஆயுதங்களால் சூழப்பட்டவரும், எட்டு சக்திகளுடன் கூடியவரும்,எட்டு ஆரங்களுடன் கூடிய மிக பயங்கரமான சக்ரத்தை உடையவரும், 

இந்த சக்ரம், உலக்கை, ஈட்டி, தாமரை என்ற 
நான்கையும், வலது கைகள் நான்கில் தரித்தவரும், இடதுபுறம் உள்ள நான்கு கைகளில், சங்கம் அம்புடன் கூடிய, வில் பாசக்கயிறு கதை ஆகியவைகளை தரித்தவரும்,

சிவப்பு புஷ்ப மாலையால் சோபிப்பவரும், சிவப்பு சந்தனத்தால் பூசப்பட்ட, அங்கங்களை உடையவரும், திவ்ய ரத்னங்களால் இழைக்கப்பட்டதும் விசித்திரமானதும் ஆகிய, கிரீடத்தால் பிரகாசிப்பவரும், துஷ்டர்களை அடக்கி, பக்தர்கட்கு அனுக்ரஹம் செய்பவருமான,"ஸ்ரீ சுதர்ஸனர்" என்ற பெயருள்ள "சக்ரத்தாழ்வாரை" தனக்கு எதிரில் இருப்பதாக, ஸ்மரித்துக் கொண்டு,"சூர்ய பகவான்" த்யானம் செய்ததாக பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது.

உலகத்தைக் காக்கும் சகல வல்லமை கொண்டுள்ள விஷ்ணு பகவானே - சுதர்ஸனரை நிரந்தரமாக தனது திருக்கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத ஸ்னானம் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சகக்ரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக காட்சி தருகிறார்.

ஸாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்ரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

அநீதிகளை அழிக்க (பகவானுக்கு) பயன்படுகின்ற சக்கரத்தாழ்வாரின் சந்நிதிகள் பல திவ்ய தேசங்களிலும் உள்ளன. காஞ்சி வரதர் கோயில், திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமோகூர், திருக்குடந்தை உள்ளிட்ட ஆலயங்களில் தனி சந்நிதியில் சேவைசாதிக்கிறார் 

சக்கரத்தாழ்வார்.

திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும், அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. ஒருமுறை காவிரியில் அரங்கனுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்ற நேரம், காவிரியில் வேகம் அதிகரித்தது. அரங்கனை அந்த வெள்ளத்தில் இருந்து மீட்க முடியுமா என்ற பயம் ஏற்பட்டபோது, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த "கூரநாராயண ஜீயர்" என்பவர், சுதர்சன சதகத்தை இயற்றி சுதர்சனரை வேண்ட.... காவிரி வெள்ளம் குறைந்து அரங்கன் கரையேறினான். இந்த சுதர்சன சதக பாராயணம் பல சங்கடங்களைப் போக்கும் மாமருந்தாகும்!

ஸ்ரீ சக்ரத்தாழ்வார் தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்கிறார்!


ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சிணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு .

ஸ்ரீ சுதர்ஸனர் – சக்கரத்தாழ்வார் மகிமை!

சக்கரத்தாழ்வார் மந்திரம்


ஓம் ஸ்ரீ சுதர்ஸனாய நம:

ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹாஜ்வாலாய தீமஹிதந்நோ சகர ப்ரஜோதயாத்||

ஸ்ரீ மஹா சுதர்ஸன மஹாமந்திரம்

ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபிஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ரஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்
ஓம் நமோ பகவதே சுதர்ஸனாய
ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய
மகா சக்ராய மகா ஜ்வாலாய
சர்வரோக ப்ரசமனாய
கர்ம பந்த விமோசனாய
பாதாதி மஸ்த பர்யந்தம்
வாத ஜனித ரோஹான்
பித்த ஜனித ரோஹான்
ச்லேஷ்ம ஜனித ரோஹான்
தாது சங்கலிகோத்பவ நாநாவிகார ரோஹான் நாசய நாசய|ப்ரச்மய ப்ரச்மய
ஆரோக்யம் தேஹி தேஹி ||
ஓம் ஸஹஸ்ரார ஹும்பட் ஸ்வாஹா||

பஞ்சாயுதங்களில் முதன்மையானவர் ஸ்ரீசுதர்சனர், சுதர்சனமே திருமால் என்றும், திருமாலே சுதர்சனம் என்றும் வழிபடுவதுண்டு

சுதர்சனர் என்ற பெயருக்கு நல்வழிகாட்டுபவர் என்றும் 
காண்பதற்கு இனியர் என்றும் பொருள். 

விஷ்ணுவின் கரங்களில் காணப்படும் சுதர்சன சக்ராயுதத்தில் உறையும் தேவனே சுதர்சன் எனப்படுகிறார். 

இந்த சக்கரம் சுதர்சன சக்கரம் என்று வழங்கப்படுகிறது. காத்தல் தொழிலைக் கொண்ட விஷ்ணுவிற்கு துஷ்டநிக்ரஹம் செய்ய சக்கர ஆயுதம் உறுதுணை புரிகிறது. 

ஆயுதங்களில் இராஜனாக இருப்பதால் இவரை ஹேதிராஜன் என்றும் கூறுவர். இவர் உக்கிர வடிவினர். 

சக்கரராயர் திருவாழி ஆழ்வான், திகிரி, ஹேதிராஜன், சக்கரத்தண்ணல் நேமிதரங்கம் என்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

விஷ்ணுவின் சக்கர சக்தியை சக்கரத்தாழ்வார் என்று அழைப்பதுண்டு. ஆனிச் சித்திரையில் சுதர்சன ஜயந்தி கொண்டாடப்படுகிறது. 

சுதர்சன வடிவங்களை சக்கரரூபிவிஷ்ணு எனக் குறிப்பிட்டு திருக்கோவில்களில் எட்டு அல்லது பதினாறு கரங்களுடன் வீறுகொண்டு எழும் தோற்றத்துடன் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் திருவுரு கல்லிலும் செம்பிலும் அருள்புரிகிறது..!

காஞ்சியில் அஷ்டபுஜம் (எண்கரங்கள்) கொண்ட பெருமான் ஆகவும். குடந்தையில் கோவில் கொண்டுள்ள பிரான் சக்கரத்தை திருக்கரத்தில் ஏந்திநிற்கும் சக்கரபாணியாகவும் திருவருள் பொழிகிறார்.

சுதர்சனர் அறுகோணச் சக்கரத்தில் சமபங்கநிலையிலும் பிரத்யலீடமூர்த்தியாகவும் எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு திருக்கைகளுடனும் திரு ஆயுதங்களுடனும் கோவில் கொண்டு சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீசுதர்சன வழிபாட்டில் ஆறு மற்றும் அதன் மடங்குகளில் மௌனமாகப் பிரதக்ஷிணம் செய்வதுண்டு. 

இதனை ஆசாரமாகச் செய்தல் நலம். 
பிரதக்ஷிணம்துவங்குகையில் நெய்விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஒவ்வொரு பிரதக்ஷிணத்திற்கும் ஒரு பழமோ அல்லது வேறு பொருள்களோ சந்நிதி வாசலில் வைத்து எண்ண வேண்டுமென்ற நியமங்கள் உள்ளன. 

மண்டலத்தை முடிக்கும் போது கோதுமைப் பாயசம் நிவேதனம் செய்வது சுதர்சன பகவானுக்கு உகந்ததாகும். 

இவையனைத்தையும் கும்பகோணம் சக்கரபாணி சுவாமி சந்நிதியில் பின்பற்றுவதைக் காணலாம் 
சுதர்சன வழிபாட்டில் மிக முக்கியமான யந்திர உபாசனை ..

செப்புத் தகட்டில் வரிவடிவில் முக்கோணம், ஷட்கோணம் போன்ற கோண அமைப்பிலும் விக்கிரக வடிவிலும் ஆராதிக்கப்படுகிறது..!
சிவப்பு மலர்கள் உகந்தவை.

திருவாழி ஆழ்வாரான சக்கரத்தண்ணலின் 
பெருமை சொல்லுதற்கரியது. 
ஞானம் வழங்குபவர்; ஆரோக்கியம், அளிப்பவர்; செல்வம் தருபவர்; பகைவர்களை நீக்குபவர்; மோட்சத்திற்கு வழி செய்பவர். 
சுதர்சன உபாசனை வீரம் அளிக்கவல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியைத் தேடித்தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்கவல்லது. 

சக்கரத்தாழ்வாரை முறையோடும் நெறியோடும் வழிபடுபவர்கள் உடல் நலமும், நீண்ட ஆயுளும், நீங்காத செல்வமும் பெறுவதுடன் தாங்கள் வேண்டும் வரங்களும் குறைவின்றி பெறக்கடவர் என்று சுதர்சன சதகம் என்னும் நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. 

நூறு பாசுரங்கள் கொண்ட சுதர்சன சதகம் நூலினைப் பாராயணம் செய்வதால் எத்தகைய ஆபத்துகளிலிருந்தும் விடுபெறலாம் என்பது நம்பிக்கை. 

சிறந்த சுதர்சன உபாசியாக விளங்கிய ஸ்வாமிதேசிகர் ஸ்ரீசுதர்ன அஷ்டகம் என்ற பாமாலையினை சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.

அறிவியல் அற்புதங்களும் 
கண்டுபிடிப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ள காலத்தில் நாம் இருக்கிறோம். எண்ணிய எய்தும் அற்புதம் வாய்க்கப்பெற்ற இந்நாளில், இத்தகைய பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் ஒரு முதல் கண்டுபிடிப்பாக ஒன்று நம் நினைவில் வரும்… அது என்ன?

மனிதன் தன் சக்தியை உணரத்தொடங்கிய முதல் கால கட்டம். அதை கற்காலம் என்று வகுத்திருக்கிறார்கள் இன்றைய அறிவியலார். அந்தக் கற்காலத்தில் உணவுத் தேவைக்காக மிருகங்களை வேட்டையாடியும், கிடைத்த தாவரங்கள், கனிகளை உண்டும் வாழ்ந்துவந்த ஆதிமனிதனின் முதல் முயற்சியாக அவன் 

கண்டுபிடித்தது இதைத்தான். அது என்ன?
வானத்தை நிமிர்ந்து பார்த்த அந்த ஆதிமனிதன், தன் தலைக்கு மேல் வளர்ந்த மரத்தை நோக்கினான். நெடிதுயர்ந்து விண்ணை முட்டிய மரங்கள், ஒருநாள் மண்ணை முட்டின. அவற்றை அப்புறப்படுத்தி வேற்றிடம் கொண்டு செல்ல எண்ணிய மனிதன், அதை அப்படியே அருகில் ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீரில் தள்ளிவிட்டான். அந்த மரம் அப்படியே உருண்டு சென்று ஆற்றின் நீர்ப்பரப்பில் மிதந்து சென்றது. தரையில் உருண்டு கொண்டே சென்று ஆற்றுத் தண்ணீரில் சுற்றிச் சுழன்ற அந்த மரத்துண்டைப் பார்த்து அவன் ஒன்றைக் கற்றுக் கொண்டான். அதுதான் அறிவியல் கண்டுபிடிப்பின் மூலாதாரம் – சக்கரம். சுதர்ஸனம்.

ஸ்ரீ சுதர்ஸன மகிமை


ஜந்துனாம் நரஜன்ம துர்லபம் – எண்ணரிய பிறவியிலே மானிடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது காண் என்று மகான் தாயுமானவரும் போற்றுகிறார். இந்த மானிடப் பிறவி ஏன் சிறந்தது? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஆறறிவு பரைத்ததினால்தானே!
இறைவன் எங்குமிருக்கிறான். அவன் தன்னுள்ளும் இருக்கிறான். அவனைக் காண வேண்டும் என்ற முதிர்ந்த சிறந்த அறிவு, அந்த ஞானம் ஏற்பட வேண்டும் என்றால், இந்த மானிடப் பிறவியில்தான் முடியும். அதனால்தான் மனிதன் சிறந்தவனாகிறான்.

இறைவனைக் காண முயற்சி செய்யும்போது அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் பல. உத்திகள் அநேகம். அகண்டாகாரமான ஒரு பெரும் பொருளை தன் மனதுக்குகந்த உருவிலே வழிபட்டு வெற்றியடைந்து, முடிவிலே அப்பரம்பொருளினை அனுபவிப்பதே சிறப்பாகும். இதுவே தெய்வ உபாசனையாகும். முத்திக்கு வித்தான மூர்த்தி, சித்திக்கும் உதவுவதே உபாசனா மார்க்கத்தின் சிறப்பு. அத்தகைய சிறப்பு ஞான மார்க்கத்திலே அதன் நடுவிலே இகத்திற்கும் மிகவிரைவிலே பலனளிக்கும் நிலையிலேயுள்ள உபாசனைகளில் சுதர்சனம் ந்ருஸிம்ஹம், ஆஞ்சநேயம், ஹயக்ரீவம், வராஹம் முதலியவை குறிப்பிடத்தக்கவை.

 உக்கிர வடிவிலே உள்ள பரம்பொருளைத் தீவிர உபாசனையின் மூலம் அணுகுவதே மகா சுதர்ஸன உபாசனையாகும். மகா விஷ்ணுவின் திருக்கையை அலங்கரிக்கும் சுதர்சனர் அவருக்கும் அவரை அனவரதமும் வணங்கி பூஜிப்பவருக்கும், பாதுகாவலராயிருந்து சத்ருக்களை சம்ஹாரம் செய்து நம்மை ரக்ஷித்து வருகிறார்.

ஸ்ரீசுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்கட்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவதாக பல நூல்களும் கூறுகின்றன.

ஸ்நானே, தானே, ஜபாதௌச ச்ராத்தே சைவ விஷேத: சிந்தநீய: சக்ரபாணி ஸர்வா கௌக விநாசந: – ஸர்வ கர்மஸு பூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம் ஹி நாரத:

என்று பிரமன் நாரதருக்கு ஸ்ரீ சுதர்ஸனர் ஸ்நானம், தானம் தவம் ஜபம் த்தம் முதலியவற்றை குறிப்பிட்டு எக்காலத்திலும் தியானிக்கத்தக்கவர் என்று ஸத்யம் செய்து கூறுகிறார் என்கிறது புராணம்.

உலகத்தைக் காக்கும் சகல வல்லமை கொண்டுள்ள விஷ்ணு பகவானே – சுதர்ஸனரைநிரந்தரமாக தனது திருக்கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

பலவித உபாசனைகளில் யந்திர உபாசனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீ சுதர்ஸன யந்திரம், ஸ்ரீ சுதர்ஸன மகா யந்திரம்- இரண்டும் முறையே சக்ரரூபி விஷ்ணு, நவகிரகங்களின் நடு நாயகர், பஞ்ச பூதங்களுக்குச் சக்தியூட்டும் பரம் பொருள் – ஸ்ரீ சூரிய பகவான் உடன் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. 

யந்திரங்களுடன் கூடிய படத்தை கண்ணாடி போட்டு பூஜையில் வைத்து ஸ்நானம் செய்து மிகவும் ஆசாரத்துடன் வழிபாடு செய்து வர வேண்டும். எண்ணிய காரியங்கள் யாவற்றிலும் வெற்றி பெறலாம்.
பயங்கரமான துர்ஸ்வப்னங்கள் சித்தப்பிரமை, சதா மனோவியாகூலம், பேய் பிசாசு பில்லி சூனியம் ஏவல் இவைகளால் உண்டாகிற சகலவிதமான துன்பங்களையும் ஸ்ரீ சுதர்ஸன மகாயந்திரம் நிவர்த்திக்கும்.

சிலருக்கு ஜாதகத்தில் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்பட்டு சுபயோகங்கள் தடைபட்டு தரித்திரத்வம் ஏற்படும். ராஜயோகங்கள் பங்கப்படும். சரீர பலம், மனோபலம், தைர்யம், இவை குறைபட்டு எதிலும் தெளிவில்லாது சபை கோழையாயிருப்பார்கள். இவைபோன்ற கஷ்டங்களை ஸ்ரீசுதர்ஸன மூல மந்திரத்தை பெற்றோர் அல்லது குருவிடம் உபதேசம் பெற்று தினசரி ஜபம் செய்து யந்திர ஆராதனை செய்ய வேண்டும்.
மொத்தம் 1008 வகை சுதர்சன மந்திரங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 108 மந்திரங்கள் மிகப் பிரபலமாக உள்ளன. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை ஸித்தி செய்தல் நலம் தரும்.

காயத்ரி மஹாமந்திரம், சூரிய மண்டலம் நடுவே உள்ள ஸ்ரீமந்நாராயணன் – ஸ்ரீசுதர்சன பகவான் இவர்களைக் குறிப்பதாகும். எனவே தினமும் காயத்ரீ ஜபம் செய்த பின்னரே சுதர்சன ஜபம் செய்யவேண்டும்.

அழகு வாய்ந்த எல்லா அங்கங்களுடன் பிரகாசிப்பவரும் எட்டுக் கைகள் கொண்டவரும் மூன்று கண்கள் உடையவரும் தித்திப் பற்களால் பயங்கரமான முகத்தை உடையவரும் பயத்திற்கும் பயத்தை அளிப்பவௌம் பயங்கரமான மஞ்சள் நிறத்தலை முடி உடையவரும் அக்னி ஜ்வாலையின் மாலைகளால் சூழப்பட்டவரும் கண்களுக்கு எட்டாதவரும் குறிப்பிட முடியாதவரும் பிரமாண்டம் முழுவதும் வியாபித்த சரீரம் உடையவரும் எட்டு ஆயுதங்களால் சூழப்பட்டவரும் எட்டு சக்திகளுடன் கூடியவர்ம் எட்டு ஆரங்களுடன் கூடிய மிக பயங்கரமான சக்ரத்தை உடையவரும் இந்த சக்ரம், உலக்கை, ஈட்டி, தாமரை என்ற நான்கையும் வலது கைகள் நான்கில் தரித்தவரும் இடதுபுறம் உள்ள நான்கு கைகளில் சங்கம் அம்புடன் கூடிய வில் பாசக்கயிறு கதை ஆகியவைகளை தரித்தவரும் சிவப்பு புஷ்ப மாலையால் சோபிப்பவரும் சிவப்பு சந்தனத்தால் பூசப்பட்ட அங்கங்களை உடையவரும், திவ்ய ரத்னங்களால் இழைக்கப்பட்டதும் விசித்திரமானதும் ஆகிய கிரீடத்தால் பிரகாசிப்பவரும் துஷ்டர்களை அடக்கி பக்தர்கட்கு அனுக்ரஹம் செய்பவருமான ஸ்ரீ சுதர்ஸனர் என்ற பெயருள்ள சக்ரத்தாழ்வாரை தனக்கு எதிரில் இருப்பதாக ஸ்மரித்துக் கொண்டு சூர்ய பகவான் த்யானம் செய்ததாக பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது.

கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத ஸ்னானம் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சகக்ரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக கட்சி தருகிறார்.

ஸாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்ரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

சுதர்சன மந்திரத்தில் ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று தொடங்கும் மந்திரமே பெரும்பாலும் சுதர்சன ஹோமத்திற்குப் பயன்பட்டு வருகிறது. ஸர்வ சத்ரு நாசன சுதர்சன மந்த்ரம் இதுதான்…

ஓம் மஹா ஸுதர்சனாய
 ஸர்வ சத்ரு ஸம்ஹர ஸம்ஹர
 ஸர்வ க்ஷுத்ரம் மாரய மாரய
 ஸர்வ ரோகம் நிவாரய நிவாரய
 மஹா ஸுதர்சனாய சக்ர ராஜாய ஹும்பட் ஸ்வாஹா||

இந்த மந்திரத்தை வெண்கடுகு, ஸமித்து கொண்டு ஹோமம் செய்தால் சத்ருக்கள் அழிவார்கள். நாயுருவி உபயோகித்தால் வியாதி நாசம்… வெண்பட்டு ஹோமத்தில் இட்டால் ஐச்வர்ய விருத்தி… செந்தாமரையை இட்டால் கடன் நிவாரணம் ஆகியவை ஏற்படும்.

ரோக நிவர்த்திக்கு அஸ்வினி நட்சத்திரத்திலும் பரணி, திருவாதிரை, உத்திரட்டாதி ஸம்ஹார பிரயோகத்திற்கும், பைசாச உபாதைகளை நீக்க ஸ்வாதியும், ஏகாதசி சத்ரு நாசத்திற்கும், திரயோதசி பௌர்ணமி வச்ய ப்ரயோகம் செய்யவும் பயன்படுமென்று மந்த்ர மஹோததி மந்த்ர தத்வநிதி மந்த்ர மஹார்ணவம் முதலிய சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நம் காம்யார்த்தங்கள் நிறைவேற ஹோமமே சிறந்த ஸாதனம். பீஜங்கள் சேர்த்த மூல மந்திரத்தைப் பிரயோகத்திற்கு ஏற்றபடி தக்க ஹவிஸ்ஸுடன் நாம் அக்னிதத்வத்தில் ஸமர்ப்பிக்கிறோம். எண்ணையில் இட்ட பச்சை அப்பளம் சாப்பிடக்கூடிய நிலையில் பொரிந்து வருவதைப்போல ஹவிஸ்ஸுடன் சேர்ந்த மந்திரம் தீயில் ஸ்வாஹா என்று இடப்பட்டு உடனே நம் காம்யார்த்தங்கள் பலன் ரூபத்தில் நிறைவேறுகின்றன.

மந்திர சாஸ்திரங்களின் பிரயோகங்கள் வெளிப்படையாகக் கூறப்படுவதில்லை. நாட்டு மருத்துவத்தில் பச்சிலைகள் எவ்விதம் மறைபொருளாகக் கூறப்படுகின்றனவோ அவ்விதமே மந்த்ரமும் இலைமறை காய்மறையாகவே உபதேசிக்கப்பட்டு வந்துள்ளது. செய்யப்போகும் பிரயோகத்திற்கு தகுந்தபடி, பஞ்சபூத தத்வங்களான லம், ஹம், யம், ரம், வம் என்ற பீஜங்களையும் யாருக்காக செய்யப்படுகிறதோ அவர் பெயரையும் அதற்கு மந்திரத்தில் ஸூக்ஷ்மமாக அமைந்திருக்கும் இடத்தில் மந்த்ர பாண்டித்யம் உள்ளவர்கள் சேர்ப்பார்கள்.

நமது வீடுகளில் நடக்கும் கிரகப்பிரவேசம், ஆயுஷ்ய ஹோமம் போன்ற எந்த ஒரு விசேஷத்தின் போதும் குடும்ப ஐஸ்வர்யம் கருதி ஸ்ரீசுதர்சன ஹோமத்தையும் சேர்த்தே நடத்துவார்கள். அதேபோல் பெரிய பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் சத்ரு பயத்தை விரட்ட பிரமாண்ட அளவில் சுதர்சன ஹோமம் நடத்தப்படும். வீட்டில் நடத்தப்படும் சுதர்சன ஹோம –
தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-

சூரியனின் பிரகாசத்தை மிஞ்சுபவரும், பயங்கரக் கண்கள் கொண்டவரும் சத்ருக்களை சம்ஹாரம் பண்ணுபவரும் பலமான – பயம் தரும் சிரிப்புக் கொண்டவரும், வலுவான பல் உடையவரும், பெரிய வாய் உள்ளவரும், செப்பு நிறத் தலைமுடி வாய்த்தவரும், கைகளில் சக்கரம் – கதை – சங்கு – தாமரைப்பூ – உலக்கை – பாசம் – அங்குசம் – தர்ஜணி போன்ற ஆயுதங்கள் பெற்றவரும், சத்ருக்களுக்கு பயம் தரும் ஆதிமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீசுதர்சனரை வணங்குகிறேன்.

அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் பிரமாண்டமாக நடத்தப்படும் சுதர்சன ஹோம, தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-

சங்கு, சக்கரம், வில், மழு, வாள், அம்பு, சூலம், கயிறு, அங்குசம், கேடயம், கலப்பை, இரும்பு உலக்கை, அக்னி, கவசம், கதை, மூன்று முனைகள் கொண்ட சூலம் போன்ற ஆயுதம் ஆகியவற்றுடன் திகழும் பதினாறு கைகள் கொண்டவரும், பலமான பல் பெற்றவரும், மஞ்சள் நிறத் தலைமுடி உடையவரும், மூன்று கண்களுடன் தங்க நிற சரீரம் பெற்றிருப்பவரும், சகல சத்ருக்களின் உயிர்களை எடுப்பபவரும், அதி கயங்கரத் தோற்றம் உடையவருமான ஸ்ரீசுதர்சனரை ஷட்கோணத்தில் அமர வைத்துப் பிரார்த்திக்கிறேன்.

சுதர்சன ஹோமத்தின் போது, சக்தி வாய்ந்த பல மந்திரங்கள் சொல்லி ஹோமப் பொருட்களை அக்னி பகவானுக்குச் சமர்ப்பிப்பார்கள். இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஸ்ரீசுதர்சன காயத்ரி, ஸ்ரீசதர்சன மாலா மந்திரம், ஸ்ரீநரசிம்ம மந்திரம், ஸ்ரீநரசிம்ம காயத்ரி, ஸ்ரீவிஷ்ணு காயத்ரி, ஸ்ரீலட்சுமி காயத்ரி, ஸ்ரீலட்சுமி மந்திரம், ஸ்ரீதன்வந்திரி மந்திரம், பஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வதால் பலன் அதிகமாக கிடைக்கும்.

ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்து ஒருவர் ஹோமம் செய்தால் இந்த மந்திரத்துக்கு உண்டான பலன் கிடைக்கும். எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயாசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மந்திரத்தை உளமார உச்சரித்து ஜெபிக்க வேண்டும்.முழுமனதோடு மிகுந்த முயற்சியுடள் செயல்பட்டால்தான் கிடைக்கிற பலன் முழு அளவில் இருக்கும். ஹோமங்களை எந்த அளவுக்கு நாம் சிரத்தையாகப் பண்ணுகிறோம் என்பதை வைத்து பகவான் அனுக்கிரஹம் செய்வார். பகவத் கீதையில் நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன் என்கிறார் பகவான். எனவே வாழ்வில் பல நன்மைகளை பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம்.

ஸ்ரீ சக்ரத்தாழ்வார் தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்கிறார்!

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சிணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.