Son angry over father's refusal to buy bike
நெமிலி அடுத்த திருமாதலம் பாக்கம் கிராமம் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி சேட்டு. இவரது மகன் குமரேசன் (19). கீழம்பியில் உள்ள பாலிடெக்னிக்கில் இறுதியாண்டு படித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் குமரேசன் தன்னுடைய பெற்றோரிடம் தனக்கு கல்லூரி சென்றுவர பைக் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை தற்போது பைக் வாங்க வேண்டாம்.
கல்லூரி படிப்பு முடிந்ததும் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.இதனால் குமரேசன் கோபம்டைந்து வீட்டில் யாரிடமும் பேசாமல், சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வது போல பேக் மாட்டிக்கொண்டு சென்றுள்ளார். ஆனால் கல்லூரி செல்லாமல் ஆட்டுப்பாக்கம் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள வயல்வெளிக்கு சென்று பேக்கில் எடுத்து வந்திருந்த பூச்சி மருந்தை குடித்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.