IRIS instead of Fingerprint new rules in Ration shop
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் அமலில் உள்ள கைரேகை பதிவு மக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தையும் கஷ்டத்தையும் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் கைரேகைக்கு பதிலாக கண்ணை பதிவு செய்ய அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இந்த முடிவு நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் பொருட்களுக்கு கட்டாயம் தேவை
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் நிவாரண உதவிகள் உள்ளிட்டவைகள் நியாய விலைக் கடை வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.
மோசடிகளை தடுக்க
தற்போது ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுவருகிறது அதற்கு பயோமெட்ரிக் முறையில் பயன்படுத்தி பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதில் உள்ள க்கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு அதில் காட்டப்படும் பெயரில் உள்ளவர்கள் மட்டுமே கைரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்க முடியும் என்ற நடைமுறை இருப்பதால்.
பல்வேறு சிக்கல்களை இதனால் பொதுமக்கள் சந்தித்து வருகிறார்கள், காரணம் என்னவென்றால் பணிக்கு செல்வதால் சரியான நேரத்தில் நியாயவிலை கடையில் போய் பொருட்கள் வாங்க முடிவதில்லை இதனால்.
அதுமட்டுமில்லாமல் வெளியூர் சென்றாலும் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
தொழில் நுட்பத்தில் பல்வேறு சிக்கல்கள்
ஆனால் சில நேரங்களில் பயோமெட்ரிக் இயந்திர கோளாறு காரணமாக பொருட்கள் விநியோகம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் இதில் சில குளறுபடிகளும் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
எனவே இந்த முறை சரியாக நடக்கிறதா என்பதை உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அமைச்சர் தகவல் என்ன
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் இனிவரும் நாட்களில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நியாயவிலை கடைகளில் பதிவின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும் அதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக நியாயவிலை கடைகளில் பரிசோதனை அடிப்படையில் கைக்கு பதிலாக கண் கருவிழி சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்படும்.
என சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பலன் கொடுக்குமா
இந்தப் புதிய நடைமுறை பலன் கொடுக்குமா அல்லது பழைய நடைமுறை போலவே இதுவும் பல்வேறு சிக்கல்களையும் குளறுபடிகளையும் ஏற்படுத்துமா என்பதை வரும் காலங்களில் தான் தெரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமில்லாமல் அட்டைதாரர்களுக்கு தனியாக என்று பாக்கெட் செய்யப்பட்ட முறையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனால் சரியான அட்டைதாரர்களுக்கு அவர்களுடைய பொருட்கள் சென்று சேரும் என்றும், ரேஷன் பொருட்கள் கடத்துவது இனிவரும் காலங்களில் குறையும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.