குறள் : 779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்
மு.வ உரை :
தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.
கலைஞர் உரை :
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.
சாலமன் பாப்பையா உரை :
தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?.
Kural 779
Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare
Pizhaiththadhu Orukkir Pavar
Explanation :
Who would reproach with failure those who seal their oath with their death ?
Horoscope Today: Astrological prediction for June 13, 2022
இன்றைய ராசிப்பலன் - 13.06.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
13-06-2022, வைகாசி 30, திங்கட்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 09.03 வரை பின்பு பௌர்ணமி. அனுஷம் நட்சத்திரம் இரவு 09.24 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி (கிரிவலம் செல்ல). லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Nalla neram
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 13.06.2022 | Today rasi palan - 13.06.2022
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். அதிகபடியான பணிசுமையால் அலைச்சல், ஆரோக்கிய குறைவுகள் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
சிம்மம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகளை சமாளிக்க முடியும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.
கன்னி
இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் கைகூடும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். வேலையில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை அடைவீர்கள். நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். பண பற்றாக்குறையால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரி வழியில் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பாராத பணவரவால் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
மகரம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக நடைபெறும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சந்தோஷம் கூடும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
மீனம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும். வேலையில் கவனமுடன் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001