குறள் : 770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்
மு.வ உரை :
நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும் தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.
கலைஞர் உரை :
உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை :
சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.
Kural 770
Nilaimakkal Saala Utaiththeninum Thaanai
Thalaimakkal Ilvazhi Il
Explanation :
Though an army may contain a large number of permanent soldiers itcannot last if it has no generals.
Horoscope Today: Astrological prediction for June 04, 2022
இன்றைய ராசிப்பலன் - 04.06.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
04-06-2022, வைகாசி 21, சனிக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 04.53 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூசம் நட்சத்திரம் இரவு 09.55 வரை பின்பு ஆயில்யம். சித்தயோகம் இரவு 09.55 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. வாஸ்து நாள் காலை 09.51 மணி முதல் 10.27 மணி வரை.
இராகு காலம் | Indraya Nalla Neram
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 04.06.2022 | Today rasi palan - 04.06.2022
மேஷம்
இன்று உடல்நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
ரிஷபம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும், எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பணப்பிரச்சினைகள் குறையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் நிம்மதி குறைவு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடன்கள் தீரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வம்பு வழக்குகளில் சாதகமான சூழ்நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சலும் உடல் நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.
கன்னி
இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். சொந்த தொழில் புரிபவர்களுக்கு பெரிய மனிதர்களுடன் தொடர்பு கிட்டும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமாக பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும்.
தனுசு
இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் பொறுமையும், செயலில் நிதானத்தையும் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளையும், சுப நிகழ்ச்சிகளையும் தள்ளி வைப்பது உத்தமம்.
மகரம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் வேற்று மொழி நபர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுக்கும் காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
மீனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் உதவியால் உங்களின் நெருக்கடிகள் சற்று குறையும். வராத கடன்கள் வசூலாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001