குறள் : 769

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை


மு.வ உரை :

தன் அளவு சிறிதாகத் தேய்தலும் தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.


கலைஞர் உரை :

சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.


சாலமன் பாப்பையா உரை :

எண்ணிக்கையில் சிறுமை, அரசின் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.


Kural 769

Sirumaiyum Sellaath Thuniyum Varumaiyum

Illaayin Vellum Patai


Explanation :

An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.


Horoscope Today: Astrological prediction for June 03, 2022



இன்றைய ராசிப்பலன் - 03.06.2022 | Indraya Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

03-06-2022, வைகாசி 20, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.42 வரை பின்பு பஞ்சமி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 07.05 வரை பின்பு பூசம். சித்தயோகம் இரவு 07.05 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Nalla Neram

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00


இன்றைய ராசிப்பலன் - 03.06.2022 | Today rasi palan - 03.06.2022


மேஷம்

இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் தீரும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவிகள் மூலம் கடன் பிரச்சினை தீரும். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். புத்திரர்களால் பெருமை சேரும். உத்தியோத்தில் புதிய நட்பு மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். 

துலாம்

இன்று உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் உண்டாகும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் மதியத்திற்கு பின் சற்று குறையும்.

தனுசு

இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12.20 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழில் வியாபாரத்தில் வெளிவட்டார நபர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.

கும்பம்

இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். உடன் பிறப்புகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம். வம்பு வழக்குகளில் இழுபறி நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். தெய்வ வழிபாடு நல்லது.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001