அரக்கோணம் சப்-கலெக்டராக சிவதாஸ் பணியாற்றி வந்தார். இவர் மாற்றப்பட்டார், நாமக்கலில் துணை கலெக்டராக பயிற்சி பெற்று வந்த பாத்திமா அரக்கோணம் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர், அரசின் நலத் திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு விரைந்து கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் அலுவலகத்தில் நேரடியாக வந்து குறைகளை மனுவாக கொடுத்தால் அதன் மீது உடனடி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து புதிய சப் கலெக்டருக்கு விஏஒக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.