அரக்கோணம் தோல் ஷாப் பகுதியைச் சேர்ந்தவர் மனோ(22). மனைவி அம்சாநந்தினி(21). மனோ பூக்கட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.
அம்சாநந்தினிக்கு ஒன்னரை மாதத்துக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனால், மனோ வீடு சந்தோஷத்தில் மிதந்தது. உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இந்நிலையில், தாயின் அரவணைப்பில் படுத்திருந்த பச்சிளம் குழந்தை ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டு கழிவறையில் சடலமாக கிடந்தது.
இதனால் ஒன்னரை மாதங்களாக சந்தோஷத்தில் திளைத்த மனோவின் வீடு மட்டுமின்றி அப்பகு தியே கண்ணிரில் மிதந்தது. இச்சம்பவத்தில் குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவர்தான் இக்கொடும் செயலை செய்திருக்க வேண்டு மென்று போலீசார் முடிவு செய்தனர்.
தீவிர விசாரணையில், சொத்துக்கு ஆசைப்பட்டு மனோவின் அத்தை தேன்மொழி, அவரது மகள் பாரதி ஆகியோர் இப்படுபாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அரக்கோணம் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.