குறள் : 791
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
மு.வ உரை :
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.
கலைஞர் உரை :
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.
சாலமன் பாப்பையா உரை :
விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.
Kural 791
Naataadhu Nattalir Ketillai Nattapin
Veetillai Natpaal Pavarkku
Explanation :
As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him) there is no evil so great as contracting a friendship without due inquiry.
Horoscope Today: Astrological prediction for June 25, 2022
இன்றைய ராசிப்பலன் - 25.06.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
25-06-2022, ஆனி 11, சனிக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.10 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பரணி நட்சத்திரம் பகல் 10.23 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Nalla Neram
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 25.06.2022 | Today rasi palan - 25.06.2022
மேஷம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வேலைபளு குறையும்.
மிதுனம்
இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி மகிழச்சி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளையும், வெளிப் பயணங்களையும் தவிர்க்கவும்.
துலாம்
இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் கைகூடும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001