குறள் : 784

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு

மு.வ உரை :

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

கலைஞர் உரை :

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

சாலமன் பாப்பையா உரை :

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.

Kural 784

Nakudhar Poruttandru Nattal Mikudhikkan
Mersenaru Itiththar Poruttu

Explanation :

Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.

Horoscope Today: Astrological prediction for June 18, 2022


இன்றைய ராசிப்பலன் - 18.06.2022 | Indraya Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam



18-06-2022, ஆனி 04, சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.20 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. திருவோணம் நட்சத்திரம் காலை 07.39 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.  

இராகு காலம் | Indraya Nalla Neram

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 18.06.2022 | Today rasi palan - 18.06.2022


மேஷம்

இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். பொன் பொருள் சேரும்.

ரிஷபம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். 

மிதுனம்

இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது, அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது உத்தமம். 

கடகம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்

இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறிய தடைக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். 

மீனம்

இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். தொழில் சம்பந்தபட்ட முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001