குறள் : 783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
மு.வ உரை :
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல் நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
கலைஞர் உரை :
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.
சாலமன் பாப்பையா உரை :
படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.
Kural 783
Navildhorum Noolnayam Polum Payildhorum
Panputai Yaalar Thotarpu
Explanation :
Like learning the friendship of the noble the more it is cultivated the more delightful does it become.
Horoscope Today: Astrological prediction for June 17, 2022
இன்றைய ராசிப்பலன் - 17.06.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
17-06-2022, ஆனி 03, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி காலை 06.11 வரை பின்பு சதுர்த்தி திதி பின்இரவு 03.00 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. உத்திராடம் நட்சத்திரம் காலை 09.56 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் காலை 09.56 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். (காலை 09.56 வரை) சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Nalla Neram
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 17.06.2022 | Today rasi palan - 17.06.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி கூடும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை எதிர்பாராத வகையில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும்.
ரிஷபம்
இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி
இன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதவும் ஒத்துழைப்பும் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் பணவரவு சுமாராக இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும்.
மகரம்
இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.
மீனம்
இன்று குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001