குறள் : 774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
மு.வ உரை :
கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.
கலைஞர் உரை :
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.
சாலமன் பாப்பையா உரை :
தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகின்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.
Kural 774
Kaivel Kalitrotu Pokki Varupavan
Meyvel Pariyaa Nakum
Explanation :
The hero who after casting the lance in his hand on an elephant comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).
Horoscope Today: Astrological prediction for June 08, 2022
இன்றைய ராசிப்பலன் - 08.06.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
08-06-2022, வைகாசி 25, புதன்கிழமை, அஷ்டமி திதி காலை 08.31 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 04.30 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 04.30 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla Neram
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 08.06.2022 | Today rasi palan - 08.06.2022
மேஷம்
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் செயல்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியை தரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். கடன்கள் குறையும்.
துலாம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். நினைத்த காரியம் நிறைவேறும். சுபகாரியம் கைகூடும்.
தனுசு
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 10.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்களுக்கு இருந்த பொருளாதார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
கும்பம்
இன்று நீங்கள் சற்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 10.03 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது, எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. வெளி நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மீனம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001