குறள் : 773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு
மு.வ உரை :
பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர் ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
கலைஞர் உரை :
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.
சாலமன் பாப்பையா உரை :
பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.
Kural 773
Peraanmai Enpa Tharukanon Rutrakkaal
Ooraanmai Matradhan Eqku
Explanation :
The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.
Horoscope Today: Astrological prediction for June 07, 2022
இன்றைய ராசிப்பலன் - 07.06.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
07-06-2022, வைகாசி 24, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி காலை 07.55 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 03.49 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 03.49 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. துர்காஷ்டமி. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla neram
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 07.06.2022 | Today rasi palan - 07.06.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
ரிஷபம்
இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் ரீதியாக வெளி வட்டார நட்பு ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கடகம்
இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மன ஸ்தாபங்கள் உண்டாகும். வெளிப் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.
கன்னி
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட பேச்சுவார்த்தைகளில் சாதகப்பலன் கிட்டும். முன்கோபத்தை குறைப்பது உத்தமம்.
துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து மன நிம்மதி அடைவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்
இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
கும்பம்
இன்று உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் தீரும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001