குறள் : 797

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

மு.வ உரை :

ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.

கலைஞர் உரை :

ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை :

அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.

Kural 797

Oodhiyam Enpadhu Oruvarkup Pedhaiyaar
Kenmai Oreei Vital

Explanation :

It is indead a gain for one to renounce the friendship of fools.

Horoscope Today: Astrological prediction for July 01, 2022

இன்றைய ராசிப்பலன் - 01.07.2022 | Indraya Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

01-07-2022, ஆனி 17, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 01.10 வரை பின்பு வளர்பிறை திரிதியை. பூசம் நட்சத்திரம் பின்இரவு 03.56 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. அமிர்தலட்சுமி விரதம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Rasi Palan

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00  

இன்றைய ராசிப்பலன் - 01.07.2022 | Today rasi palan - 01.07.2022


மேஷம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

கடகம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

சிம்மம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். தொழிலில் பெரிய முதலீடு கொண்டு தொடங்கும் காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது உத்தமம்.

மகரம்

இன்று பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் கிட்டும்.

கும்பம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும். 

மீனம்

இன்று பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். சகோதர சகோதரிகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001